ஏதென்ஸ்: ஐரோப்பிய சந்தையின் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் கிரீஸ் நாட்டின், மொத்த கடன் அளவு 242.8 பில்லியன் யூரோ (271 பில்லியன் டாலர்) என ரெயூட்டர்ஸ் நிறுவனம் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய சந்தையில் கிரீஸ் மிகப்பெரிய கடனாளியாக உருவெடுத்துள்ளது. சரி யார் யாருக்கு எவ்வளவு கடன் பாக்கியுள்ளது என்பதை இங்குப் பார்ப்போம்.
சர்வதேச நாணய நிதியம் (IMF)
செவ்வாய்க்கிழமைக்குள் ஐஎம்எப் அமைப்பிற்கு, கிரீஸ் அளிக்க வேண்டிய தவணை தொகையான 7.1 பில்லியன் யூரோ நிதியுதவிக்குப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மார்ச் 2016ஆம் ஆண்டுக்குள்ள ஐஎம்எப் அமைப்பிற்கு 16.3 பில்லியன் யூரோ செலுத்த உள்ளதாகக் கிரீஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கிரீஸ் நாட்டு, ஐஎம்எப் அமைப்பிற்கு அளிக்க வேண்டிய மொத்த நிலுவை தொகையின் அளவு 48.1 பில்லியன் யூரோவாகும்.
ஐரோப்பிய சென்டரல் வங்கி
சென்டரல் வங்கியின் மூலம் 18 பில்லியன் யூரோ மதிப்புள்ள பத்திரங்களைக் கிரீஸ் விற்றுள்ளது. தற்போதிய நிலையில் இப்பத்திரங்கள் முக மதிப்பிற்கு மட்டுமே மதிப்பிடும் அளவில் உள்ளது.
மேலும் கிரீஸ் தற்போது ஐரோப்பிய சந்தையில் இருந்து விலகினால் ஐரோப்பிய சென்டரல் வங்கி மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும்.
யூரோ சோன்
2010ஆம் ஆண்டுக் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியை தீர்க்க ஐரோப்பிய சந்தைகள் இரட்டை வழிக்கடன் திட்டத்தின் கீழ் சுமார் 52.9 பில்லியன் யூரோ அளித்தது.
இதன்பின் 2012ஆம் ஆண்டு இரண்டாவது நிதியுதவி திட்டம் ஒப்புதல் பெற்றது இதன் மூலம் கிரீஸ் 141.8 பில்லியன் யூரோ நிதியுதவி பெற்ற குறிப்பிடத்தக்கது.
அதிகம் கடன் கொடுத்த நாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ் நாட்டிற்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளில் பிரான்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் பிரான்ஸ் 41.98 பில்லியன் டாலர், இத்தாலி 37.76 பில்லியன் டாலர், ஸ்பெயின் 25.1 பில்லியன் டாலர் அளவு கொடுத்துவிட்டுத் தற்போது கடன் தொகையை மீட்டு எடுப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.
கடன் காலம்
கடனை திருப்பிச் செலுத்த கிரீஸ் நாட்டிற்கு அளிக்கப்பட்ட 15 வருடத்தை அனைத்து நாடுகளும் இந்நாட்டின் நிதிநிலையை ஏற்று 30 வருடமாக உயர்த்தியது.
வட்டி விகிதம்
மேலும் கடனுக்கான வட்டி வகிதத்தை அனைத்து நாடுகளும் அமைப்புகளும் 0.5 சதவீதம் வரை குறைந்ததுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications