இன்றைய பிரமாண்ட டெக்னாலஜி நிறுவனங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது தெரியுமா?

சிறிய நிறுவனங்களாக இருந்து எதிர்நீச்சல் போட்டு, போட்டிகளைச் சமாளித்த நிறுவனங்கள்தான். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்து இன்று சரித்திரமாக மாறியுள்ள எட்டு நிறுவனங்கள்.

இன்றைய தினத்தில் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருப்பவை நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றிவிடும் தன்மைகள் கொண்டவை. நாட்டிற்கும், அரசுக்கும் மிகப்பெரிய வருவாயைத் தரும் அளவுக்கு முன்னேறியுள்ள பல நிறுவனங்கள் இந்த இடத்தை ஒரே நாள் இரவில் பெற்றதில்லை.

இந்த நிறுவனங்களும் ஆரம்பக் காலத்தில் சிறிய நிறுவனங்களாக இருந்து எதிர்நீச்சல் போட்டு, போட்டிகளைச் சமாளித்த நிறுவனங்கள்தான். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்து இன்று சரித்திரமாக மாறியுள்ள எட்டு நிறுவனங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

இன்று கணினிகள் வைத்திருப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மைக்ரோசாப்ட் என்ற பெயரை உச்சரிக்காமல் இருந்திருக்க முடியாது. இந்நிறுவனத்தின் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்தான் உலகில் உள்ள பெரும்பாலான கணினிகள், லேப்டாப்புகள் உள்படப் பல உபகரணங்களில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த 1975ஆம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலென் ஆகியோர் இன்று மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஒருசிறிய பகுதியில் குறைந்த அளவில் தொழிலாளர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

 

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளம். சீனா, இந்தியாவை அடுத்து மூன்றாவது மக்கள் தொகை அதிகம் உள்ள இணையதள நாடு. ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கில் 1.6 பில்லியன் பயனாளிகள் உபயோகித்து வருகின்றனர். ஆனால் இந்த ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது அறை நண்பர்களுடன் ஒரு சிறிய அறையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள்

கூகுள்

உலகின் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின். கூகுள் என்பது நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும். கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு டேட்டாக்கள் கொட்டிக் கிடக்கின்றனர். மின்னஞ்சல், மேப், நேவிகேஷன் என எண்ணற்ற வசதிகள் இந்தக் கூகுளில் குவிந்து கிடைக்கின்றன.

கடந்த 1998ஆம் ஆண்டு செர்ஜே மற்றும் லாரி பேஜ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இந்த நிறுவனத்தை இருவரும் தங்கள் நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு எடுத்துத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹேலெட் - பாக்கர்டு Hewlett-Packard)

ஹேலெட் - பாக்கர்டு Hewlett-Packard)

பர்சனல் கணினிகளை உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. HP என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்நிறுவனம் உலகில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பெரும்பான்மையான கணினிகளை தயாரித்தவர்கள் என்ற பெருமைக்குரிய நிறுவனம்.

வில்லியம் ஹேலெட் மற்றும் டேவிட் பாக்கர்ட் ஆகியோர் கடந்த 1939ஆம் ஆண்டு மிகச்சிறிய இடத்தில் ஆரம்பித்தனர். கலிபோர்னியாவில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட மிகச்சிறிய இடம் இன்று ஆலமரம் போல் வளர்ந்து HP கேரேஜ் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

 

அமேசான்

அமேசான்

தற்போதைய பிசியான உலகில் யாருக்கும் கடைக்கோ அல்லது பஜாருக்கோ சென்று பொருள் வாங்க நேரம் இல்லை. மக்களின் இந்தச் சோம்பேறித்தனத்தை தனது புத்திசாலித்தனத்தால் வியாபாரம் ஆக்கி கொண்ட நிறுவனம்தான் அமேசான். ஆன்லைன் வியாபாரத்தில் இன்று உலகம் முழுவதும் கொடி கட்டி பறக்கும் அமேசான் ஒரே நாளில் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்துவிடவில்லை.

கடந்த 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெஜாஸ் என்பார் ஒரு சிறிய இடத்தில் அமேசான் நிறுவனத்தை மிக எளிமையாக ஆரம்பித்தார்.

 

டெல்

டெல்

கணினி ஹார்ட்வேர் துறையில் இன்று ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம் டெல். கணினியில் உள்ள டேட்டா ஸ்டோரேஜ், மென்பொருள் உள்பட இந்நிறுவனத்தின் தரமான தயாரிப்புகள்தான். கடந்த ஆண்டு இந்நிறுவனம் EMC கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை $67 பில்லியன் விலை கொடுத்து கையகப்படுத்திக் கொண்டது.

இந்த நிறுவனம் கடந்த 1984ஆம் ஆண்டு மைக்கேல் டெல் என்பவரால் அவரது பெயரிலேயே தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அவர் தொடங்கும்போது அவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை

 

இபே (eBay)

இபே (eBay)

இண்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்கள் டூ வாடிக்கையாளர்கள் என்ற தொடர்பை ஏற்படுத்தி தொழிற்புரட்சி செய்த நிறுவனம்தான் இபே. மிகக்குறைந்த விலைகளில் மிக உயர்ந்த பொருட்களை ஆன்லைன் ஏலம் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தது இந்நிறுவனம்தான்.

கடந்த 1995ஆம் ஆண்டு பியர் ஒமிடார் என்பவர் இபே நிறுவனத்தைத் தொடங்கினார். இதை அவர் முதன்முதலில் ஒரு சிறிய அறையில் ஒருசில கணினிகளை மட்டுமே வைத்துத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+