மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்தை ஏன் வாங்க முடியவில்லை என்று தெரியுமா..?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், சிஎன்பிசி என்கிற இணையதளத்திற்கு அளித்த ஒரு பேட்டி?

மிகப் பெரிய மென்பொருள் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட், பேஸ்புக் நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த போது அதை விலை பேசி வாங்க முயற்சித்து அதில் தோல்வி அடைந்தது.

இதைப் பற்றி தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் ஏற்கனவே உங்களுக்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது நாம் ஏன் வாங்க முடியவில்லை என்று பார்ப்போம்.

தலைமை நிர்வாக அதிகாரி பால்மர்

தலைமை நிர்வாக அதிகாரி பால்மர்

இந்த விஷயம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், சிஎன்பிசி என்கிற இணையதளத்திற்கு அளித்த ஒரு பேட்டியின் மூலம் தெரிய வந்தது.

முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர், சமூக நெட்வொர்க் நிறுவனமான பேஸ்புக்கை வாங்குவதற்கு அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை தான் அணுகியதாக சிஎன்பிசி பேட்டியில் கூறியுள்ளார்.

 

24 பில்லியன் டாலர்

24 பில்லியன் டாலர்

ஜுக்கர்பெர்க்கிற்கு அவரது குறிக்கோள் ஏதுவென்று நன்கு தெரியும். பால்மர் சமூக நெட்வொர்க் நிறுவனத்திற்கு விலையாக சுமார் 24 பில்லியன் டாலர்கள் தர முன் வந்ததாக நினைவு கூர்ந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஜுக்கர்பெர்க் அவர்களுக்கு எவ்வளவு தர முன் வந்தது என்கிற கேள்விக்கு, "ஓ, அது சுமார் 24 பில்லியன் டாலர்கள் என நினைக்கின்றேன். பேஸ்புக் நிறுவனம் மிகவும் சிறிய நிறுவனமாக இருந்த பொழுது இந்த மிகப் பெரிய தொகை விலை பேசப்பட்டது. ஆயினும் மார்க் ஜூக்கர்பெர்க் அதற்கு மறுத்து விட்டார். நான் அதை மதிக்கின்றேன்", என்று விடை அளித்துள்ளார்.

 

பேஸ்புக் விளைவு

பேஸ்புக் விளைவு

டேவிட் கிர்க்பாட்ரிக்கினால் 'பேஸ்புக் விளைவு' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் சைமன் மற்றும் ஸ்கஸ்டர் போன்றவர்களால் வெளியிடப்பட்டது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பேஸ்புக் நிறுவனத்தைக் கையகப்படுத்தல் முயற்சி பற்றி கூடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புத்தகத்தில் பேஸ்புக் மற்றும் அதன் சமூக தாக்கங்கள் பற்றிய வரலாறு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் புத்தகத்தில், கிர்க்பாட்ரிக், "மைக்ரோசாப்ட் ஒரு $ 15 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஃபேஸ்புக்கில் ஒரு சிறிய பங்கைக் கைப்பற்றி இருக்காலாம். அதன் பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு 5 சதவீத பங்குகளை வாங்கும் சந்தர்ப்பம் இருந்த்தது. அவ்வாறு நடந்திருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்தை சுமார் 5 முதல் 7 வருடங்களில் முழுவதுமாக கைப்பற்றி இருக்கும்" என தெரிவிக்கின்றார்.

 

முதலீடு

முதலீடு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற இயலாமல் போனாலும், அந்த நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் சுமார் 1.6 சதவீத பங்குகளை சுமார் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பில் 2007ம் ஆண்டு வாங்கியது.

பேஸ்புக் நிறுவனம், அதே கால கட்டத்தில் மிகப் பெரிய ஆன்லைன் தேடல் நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் இருந்து தனக்கு வந்த கைப்பற்றும் கோரிக்கையை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன முதலீடு என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நடந்த புரட்சியாக கருதப்பட்டது.

சில பகுப்பாய்வாளர்கள், அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் மேற்கொண்ட சிறந்த முதலீடு எனக் கருதுகின்றனர்.

 

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

2007 ஆம் ஆண்டில், பேஸ்புக் நிறுவனத்தில் சுமார் 300 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது அந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 100 மில்லியன் மற்றும் $ 150 மில்லியன் டாலர்களுக்கு இடையே இருந்திருக்கலாம். என நம்பப்படுகிறது

பகைமை இல்லை

பகைமை இல்லை

பேஸ்புக் முதலீடு, என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்குக் கொடுத்த ஒரு அடியாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் கூகுள் நிறுவனம் ஏஓஎல் நிறுவனப் பங்கு, வீடியோ பகிர்வு தளமாகிய யூ டூயூப் இல் உரிமை, மற்றும் ஆன்லைன் விளம்பரம் சேவை நிறுவனமான டபுள் க்ளிக் போன்ற நிறுவன முதலீடுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தோற்கடித்திருந்தது.

பேஸ்புக் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மிகவும் வசதியாக வேலை செய்து வருகின்றன, என என்பிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. கூகுள் நிறுவனம் மிகவும் பகிரங்கமாக தன்னுடைய சொந்த சமூக வலைத்தளத்தை மிகவும் வலிமையாகக் கட்டி எழுப்பி வருகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+