கணக்குப்பிள்ளையாகும் ChatGPT! சம்பளம் எங்க போகுதுன்னே தெரியலையா? இனி வரவு செலவை AI பார்த்துக்கும்!

"இந்த மாசம் 1-ஆம் தேதி சம்பளம் வாங்கினேன். வாங்குன சம்பளம் எங்க போனுச்சுனே தெரியல". இப்படித்தான் நம்மில் பலர் மாத கடைசியில் புலம்பி கொண்டிருக்கிறோம். வரவு ஒரு புறம் இருந்தாலும், செலவு பல பக்கங்களில் இருந்து வருவதால் எதற்காக செலவு செய்தோம் என்பதையே மறந்து வருகிறோம். அதற்காக ChatGPT-யிடம் எப்படி பணம் சேமிப்பது? என்று கேட்டால் உடனடியாக பட்ஜெட் போடுங்கள், வீண் செலவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என அட்வைஸ் மழையை பொழியும். ஆனால் இனி அப்படி நடக்காது! உங்களுடைய சொந்த வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டுகளை நேரடியாக ChatGPT உடன் இணைத்துவிட்டால் உங்களுடைய பர்சனல் அசிஸ்டன்ட் போலவே செயல்படும்.

இந்த புதிய வசதியின் மூலம் ஒருவர் தங்களுடைய சேமிப்பு எவ்வளவு? கிரெடிட் கார்டு பில் எவ்வளவு? எந்தெந்த ஆப்-களுக்கு சப்ஸ்கிரைப் செய்து பணம் போகிறது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு பேங்கிங் ஆப்களை உபயோகிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பிரத்தியேகமாக இதற்காக "பைனான்ஸ்" என்ற ஒரு பகுதி ChatGPT-யில் வரவிருக்கிறது. இதில் உங்கள் ஒட்டுமொத்த பணப்புழக்கமும் ஒரே டேஷ்போர்டில் அழகாக தெரியும்.

இன்னும் அதிகம் செலவு செய்பவர்கள் எக்ஸெல் ஷீட்டில் தங்களுடைய வரவு செலவுகளை குறித்து வைத்து வருகின்றனர். அந்தக் காலமெல்லாம் ஓவர். இனி ChatGPT ஒன்று மட்டுமே போதும்.

 கணக்குப்பிள்ளையாகும் ChatGPT! சம்பளம் எங்க போகுதுன்னே தெரியலையா? இனி வரவு செலவை AI பார்த்துக்கும்!

இதை பயன்படுத்துவது எப்படி?: ChatGPT சைடுபாரில் இருக்கும் பைனான்ஸ் என்பதைக் கிளிக் செய்து விட்டு "கெட் ஸ்டார்ட்டட்" கொடுக்க வேண்டும் அல்லது சாட்டில் நேரடியாக @Finances, connect my accounts என்று டைப் செய்து உள்நுழையலாம். உங்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்கள் இணைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே நீங்கள் எதற்காக பரிவர்த்தனை செய்திருக்கிறீர்கள்? என்பதை பிரித்துப் பிரித்து அழகாக காண்பித்துவிடும்.

உங்களுடைய நிதி நலனை எல்லாம் பார்த்துவிட்டு சாட் ஜிபிடி அதன் பிறகு கணக்கச்சிதமான நிதி ஆலோசனையை வழங்கும். உதாரணமாக இந்த மாதம் ஏன் நான் இவ்வளவு செலவு செய்திருக்கிறேன்? என்று கேட்டால் அதற்கு உங்கள் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு பதிலளிக்கும். அது மட்டுமின்றி நீங்கள் எதற்காக அதிகம் செலவு செய்தீர்கள்? என்பதை கண்காணித்து இனி மாதா மாதம் குறிப்பிட்ட அளவு தான் ஒதுக்க வேண்டும் என்ற லிமிட்டையும் பரிந்துரைக்கும்.

அதேபோல ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன், தனிநபர் கடன், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு வழங்கிய பணம் ஆகியவற்றையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதிலை வழங்கும். நீங்கள் இதற்காக ஒவ்வொரு முறையும் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்? என்பதை எல்லாம் வழக்க தேவையில்லை.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?: தற்போது இந்த புதிய வசதியை ஓபன் AI அமெரிக்காவில் உள்ள சாட் ஜிபிடி ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. பயனர்களின் கருத்துக்களைப் பொறுத்து அதன் பிறகு பிளஸ் பயனர்கள் மற்றும் உலகளவில் படிப்படியாக இந்த புதிய அம்சம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.

பாதுகாப்பானதா?: எப்படி எங்களுடைய அக்கவுண்ட் விவரங்களை AI-யிடம் கொடுப்பது என்றுதானே யோசிக்கிறீர்கள். உங்களுடைய பயம் நியாயமானது தான். இதற்கும் ஓபன் AI நிறுவனம் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது. உங்களுடைய அக்கவுண்ட் விபரங்களை இணைத்த பிறகு வங்கியில் இருக்கும் பாலன்ஸ் மற்றும் பிற பரிவர்த்தனை விவரங்களை மட்டுமே சாட் ஜிபிடி-யால் பார்க்க முடியும்.

அக்கவுண்ட் நம்பரை பார்க்க முடியாது. அதேபோல உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை வேறொரு அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யவோ அல்லது முதலீடு செய்யவோ முடியாது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் அக்கவுண்ட்டை டெலிட் செய்யலாம். அப்படி செய்யப்படும் 30 நாட்களுக்குள் உங்களுடைய அனைத்து அக்கவுண்ட் விபரங்களும் ஓபன் AI கணினியில் முற்றிலுமாக நீக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+