சாட் ஜிபிடிக்கு போட்டியாக சீனா உருவாக்கிய டீப் சீக் குறித்து தான் உலகம் முழுவதும் தற்போது பேசப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெரிய நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை காப்பி அடித்து அதே போன்ற ஒரு பொருளை உருவாக்கி விடும் என பெயர் பெற்றது தான் சீனா. ஆனால் காபிகேட்டாக இருந்த சீனா தற்போது புதுமையான கண்டுபிடிப்புகளின் நாடாக மாறி வருகிறது. இதற்கு உதாரணமாக பல்வேறு அண்மைக்கால அறிவிப்புகளை கூறலாம்.
கடந்த மாதம் தான் சீனா தன்னுடைய புதிய இரும்பு உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் மற்ற நாடுகளை விட தங்கள் நாடு 3,600 மடங்கு வேகமாக இரும்பினை உருவாக்க முடியும் என சீனா இந்த உலகிற்கு நிரூபனம் செய்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில மாதத்திலேயே புதிய வகையான போர் விமானத்தை அறிமுகம் செய்தது. ஆறாவது தலைமுறை மாடல் கொண்ட இந்த போர் விமானம் உலகிலேயே சக்தி வாய்ந்த ஒரு போர் விமானம் என கருதப்படுகிறது.
அடுத்த சில மாதங்களிலேயே ஒரு நொடிக்கு 100 கிகாபைட்ஸ் அளவிலான டேட்டா டிரான்ஸ்மிஷன் திறன் கொண்ட சேட்டிலைட் டு கிரவுண்ட் லேசர் கம்யூனிகேஷன் என்ற சாதனையையும் சீனா நிகழ்த்தி காட்டியது.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை விட சீனாவின் இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு பல மடங்கு வேகமாக இருக்கிறது. இவ்வாறு அமெரிக்கா ஒரு அடி எடுத்து வைத்தால் அதை தாண்டி பல அடி எடுத்து வைத்து அனைவரையும் வியக்க வைக்கிறது சீனா.
ஒரு காலத்தில் சீனா என்றாலே காப்பி அடித்து பொருட்களை உருவாக்கும் நாடு என இருந்த பெயரை அந்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் தற்போது மாற்றி அமைத்துள்ளனர் .அப்படித்தான் சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு போட்டியாக சீனா உருவாக்கிய டீப் சீக் செயலி உலகம் முழுவதும் தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கெல்லாம் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனா அரசு மேற்கத்திய தொழில்நுட்பங்களை உள்நாட்டிற்கு கொண்டு வந்து அதற்கு ஈடாக சீனர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கியது இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சீனா வேறு ,தற்போது இருக்கக்கூடிய சீனா வேறு என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.
அலிபாபா ,டென்சன்ட், ஸியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கத்திய நிறுவனங்களின் மாடல்களை உள்வாங்கிக் கொண்டு புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
வாட்ஸ் அப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் வீசாட் செயலி. ஆனால் டென்சன்ட் நிறுவனம் வீசாட் செயலியை உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கூட அது புகழ்பெற்ற செயலியாக மாறி இருக்கிறது. மெடா உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் எல்லாம் வீசாட் மாடலை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய செயல்பாட்டை மாற்றி வருகின்றன.
டிக்டாக் செயலி அமெரிக்காவில் மிக பிரபலமாக இருப்பதையும் இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். தங்கள் நாட்டில் அதிக அளவில் ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பிரிவில் ஏராளமான மாணவர்களை சேர்ந்து கல்வி பயில வைத்தது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
சர்வதேச சொத்துரிமை கழகம் வெளியிடும் தகவலின் படி பார்க்கும்போது உலக அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்திற்கான பேடண்ட் எனப்படும் உரிமம் கோரி விண்ணப்பம் செய்யும் கண்டுபிடிப்பாளர்கள் அதிகம் சீனர்களாகத்தான் இருக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிக தீவிரமாக சீன அரசு இயங்கி வருவதும் அது சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும் இதற்கு காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனர்கள் தொழில்நுட்ப ரீதியிலான படிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் அமெரிக்காவிற்கு தான் சென்றனர். ஆனால் தற்போது பலரும் சீனாவிலேயே தங்களின் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
இதற்கு சீன அரசு ஆய்வுகளை ஊக்குவிப்பது காரணமாகும். சில செயலிகள் மூலம் மேற்கத்திய தகவல்களை உளவு பார்த்தும் சீனா இந்த கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இருந்தாலும் எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் அசைக்க முடியாத ஒரு நாடாக சீனா மாறி வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications