ஈரான்- அமெரிக்கா இடையிலான போரின் மத்தியில், மற்ற உலக நாடுகள் மீதான அறிவிப்புகளை கொஞ்சம் குறைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதிலும் அமெரிக்கா - சீனா இடையிலான பனிப்போர் சொல்லவே வேண்டாம். எப்போதும் டிராகன் தேசத்தை வசைபாடுவதை வழக்கமாக கொண்டிருந்த டிரம்பின் டார்ச்சரை சீனா சமாளித்தது எப்படி. தொடர்ந்து டிரம்ப் வர்த்தக தடை, வரி அதிகரிப்பு, சீன நிறுவனங்களுக்கு தடை என பல குடைச்சல்களை கொடுத்து வந்தார்.
ஆரம்பத்தில் அமெரிக்காவினால், சீனா சற்று ஆட்டம் கண்டிருந்தாலும், தற்போது அதையெல்லாம் சமாளித்து ஒரு வழியாக டிரம்பையும் சமாளிக்க கற்றுக் கொண்டுள்ளது. சீனா தனக்கு அடுத்தடுத்து டிரம்ப் கொடுத்து வந்த ஒவ்வொரு தடையையும் படிக்கல்லாக மாற்றி ஏறி மிதித்து கொண்டு முன்னேறி சென்று கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் டிரம்பின் ஒவ்வொரு அறிவிப்புக்கும், தனது செயல்பாட்டால் தக்க பதிலடி கொடுத்து வரும் சீனா, நஷ்டத்தில் இருந்து வந்த நிறுவனங்களை மீட்டெடுத்து லாப பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

உலகமே ஈரான் போரால் எரிபொருள் சந்தை என்னவாகுமோ என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில், சீனா சத்தமே இல்லாமல் தனது வேலையை பார்த்து கொண்டுள்ளது. இதற்கு சீனாவின் தற்சார்பு திட்டங்கள் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உண்மையில் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில், அதை சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பல நாடுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஒரு வகையில் அமெரிக்காவுக்கு நன்மை தான் என்றாலும், டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க கூறி ஈரானை மிரட்டி வருகிறார். ஆனால் இதுவரையில் இது குறித்து சீனா வாயே திறக்கவில்லை எனலாம்.
உலகின் மின்சாதன சந்தையின் மையமாக திகழும் சீனாவை, வரி விதிப்பு என்ற ஒற்றை நடவடிக்கையால் முடக்க பார்த்தார் டிரம்ப். ஆனால் டிரம்பின் அந்த அறிவிப்பை பந்தாடியுள்ளது சீனா. மேற்கத்திய நாடுகளின் பிராண்டுகளுக்காக பொருட்களை தயாரிக்கும் அஜிலியன் டெக்னாலஜி (Agilian Technology) நிறுவனம், தனது வருவாயில் பெரிய அளவில் பெற்றுத்தரும் அமெரிக்க ஆர்டர்கள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டது. மேலும் அதன் வாடிக்கையாளர்கள் சீனாவுக்கு வெளியே உற்பத்தியை தொடங்குமாறு வற்புறுத்தினர்.
அமெரிக்காவின் வரி விதிப்புகள் பல சீன நிறுவனங்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. கடந்த ஆண்டு பெரும்பகுதி, சீனாவின் அதிகாரப்பூர்வ PMI சரிவையே கண்டது. குறிப்பாக ஏப்ரல் 2025-இல், டிசம்பர் 2023-க்கு பிறகான மிகக் குறைந்த அளவை பதிவு செய்தது.
இருப்பினும் டிராகன் தேசத்தின் பதிலடி நடவடிக்கை, அதாவது அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான மற்றும் எளிதில் கிடைக்காத தாதுக்கள் மற்றும் உலோகங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள், வரி சுமைகளை குறைக்க உதவின. இதன் விளைவாக, மார்ச் மாதத்தில் சீனாவின் அதிகாரப்பூர்வ PMI ஓராண்டில் இல்லாத அளவிற்கு வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது சீனர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையே காட்டுகிறது.
ஆண்டுக்கு 30 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் அஜிலியன் போன்ற நிறுவனங்கள், இந்த இக்கட்டான சூழலிலும் சீனாவில் தங்களது வணிகத்தை வலுப்படுத்தியுள்ளன. தங்களுடைய வளர்ச்சிக்கு சீனா அவசியம் என்றாலும், இந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளிலும் பாதுகாப்பு கருதி தங்கள் உற்பத்தியை தொடங்க நிறுவனம் முயற்சித்து வருகிறது.
அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தனது அதிகாரத்தை காட்டவும் டிரம்ப் எடுத்த நடவடிக்கை, சீனாவை முடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. உண்மையில் டிரம்பின் வரிகள் சீனாவின் உற்பத்தி வேகத்தை தடுக்கவில்லை. மாறாக வர்த்தக தொடர்புகளையும், சப்ளை செயினையும் மாற்றியுள்ளது. இதன் எதிரொலியாக நடப்பு ஆண்டின் முதல் 2 மாதங்களில் சீனாவின் வர்த்தக உபரி 213.6 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 169. 21 பில்லியன் டாலராக இருந்தது.
எப்படி இருப்பினும் அமெரிக்காவின் ஏற்றுமதி 20% சரிவை கண்டதால், அந்த சந்தையை நம்பியிருந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அஜிலியன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வரும் மே மாதம் டிரம்ப் சீனா வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சுமூக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ல் கருத்து கணிப்புகள் டிரம்புக்கு சாதகமாக வந்த நிலையில், அஜிலியன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பீதி அடைந்தனர். வரி விதிப்புக்கு பயந்து பொருட்களை முன்கூட்டியே அமெரிக்க கிடங்குகளுக்கு அனுப்ப கோரினர். டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு நள்ளிரவிலேயே அழைப்புகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் மலேசியாவில் கிளையை தொடங்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அஜிலியன் இந்தியாவில் ஒரு கிளையை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி வேகம் குறைவாக இருப்பதாகவும், சுங்கத்துறை தாமதங்களாகும் பிரச்சனை என்ற நிலையில், வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்ததை போலவே டிரம்ப் பதவியேற்ற பிறகு வரிக்கு வரி என இரு நாடுகளும் மோதிக்கொண்டன. அந்த சமயத்தில் பல ஆர்டர்கள் ரத்தாகின. சீனா தொழிற்சாலைகளில் பொருட்கள் தேங்கின. பிறகு மலேசியாவிலும் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் இடம் தேடப்பட்டது. அமெரிக்காவிலும் ஆலை அமைக்க திட்டமிட்ட போது, அங்கு சம்பளம் அதிகம் என்பதால் அது தடையாக அமைந்தது. அதன் பிறகு 2025 மே மாதம் ஒரு வழியாக அமெரிக்கா - சீனா இடையே ஒப்பந்தம் போடப்பட்டதால் வரிகள் குறைந்தன. இதனால் இந்தியாவுக்கு வர வேண்டிய அவசியமும் குறைந்தது.
இதனிடையே சீனாவின் கனிம வளங்கள் மற்றும் உலோகங்கள் மீதான கட்டுப்பாடும், அமெரிக்காவை எதிர்கொள்ள உதவிகரமாக அமைந்தது. இதற்கிடையில் கடந்த அக்டோபரில் டிரம்ப் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு வரிகள் 10% குறைக்கப்பட்டது. இதுபோன்ற பல காரணிகள் மத்தியில் 2025ம் ஆண்டின் பிற்பாதியில் அஜிலியன் நிறுவனத்தின் உற்பத்தி 29% அதிகரித்தது. வாடிக்கையாளர்கள் மீண்டும் ஆர்டர்களை தந்தனர். தொடர்ந்து இந்தியா மலேசியா ஆலைகளை தொடர்ந்து மேம்படுத்த போவதாக கூறும் அஜிலியன் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் தரம், குறைந்த விலைக்கு ஈடாக யாரும் ஈடு கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications

