ரஷ்யாவுக்கு செக் வைக்க ரெடியாகும் ஜி7 நாடுகள்.. அமெரிக்காவின் திட்டம் பலிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யாவினை எப்படியேனும் முடக்கி விட வேண்டும் என்ற நோக்கில் மேற்கத்திய நாடுகள், ஒவ்வொரு தடையாக விதித்து வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோம் எனும் விதமாக ஒவ்வொரு தடையையும் தாண்டி வெற்றிக் கொடி நாட்டி வருகின்றது.

 

பல தடைகளையும் தாண்டி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது.

எனினும் மேலை நாடுகள் தொடர்ந்து ஒவ்வொரு நாடாக அடுத்தடுத்த தடைகளை விதித்து வருகின்றன.

ஜி 7 நாடுகளின் முடிவு என்ன?

ஜி 7 நாடுகளின் முடிவு என்ன?

அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய ஜி 7 நாடுகள் முடிவு செய்துள்ளன. ஜெர்மனியில் நடந்து வரும் ஜி 7 நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் மீது தடை

தங்கத்தின் மீது தடை

ரஷ்யா மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளாராகும். ரஷ்யா எரிபொருளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், எரிபொருளுக்கு அடுத்ததாக தங்கத்தின் மீதும் தடை விதிக்கப்பட உள்ளது.

கச்சா எண்ணெய்-க்கு உச்ச வரம்பு
 

கச்சா எண்ணெய்-க்கு உச்ச வரம்பு

ஜி7 நாடுகள் ரஷ்யா எண்ணெய்-க்கு விலையை கட்டுப்படுத்த, ஜி7 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது. இது விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்யா எண்ணெய் மீது விலை உச்ச வரம்பை விதித்தன. இந்த உச்ச வரம்பானது திங்கட்கிழமை முதல் பேரல் ஒன்றின் விலை உச்ச வரம்பு 60 டாலராக நியமித்தது.

ஐரோப்பாவுக்கு தடை

ஐரோப்பாவுக்கு தடை

இந்த தடையானது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை மேலும் தடை செய்ய வழிவகுக்கலாம். ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

எப்போது முதல் அமல்

எப்போது முதல் அமல்

ஜி7 நாடுகளின் இந்த முடிவு மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த உச்ச வரம்பு முடிவு டிசம்பர் 5 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்கனவே சப்ளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலை உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் தேவைக்கு அதிகமாக இருந்தது. எனினும் பற்றாக்குறையால் நிறுவனங்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையும் பாதிப்பினை எதிர்கொண்டது.

உற்பத்தியை நிறுத்துவோம்

உற்பத்தியை நிறுத்துவோம்

அண்டை நாடுகளின் முடிவால் ரஷ்யா மேற்கோண்டு நெருக்கடிக்கு தள்ளப்படலாம் என்றாலும், ரஷ்யாவும் இதற்கு எதிராக நிற்கலாம். ஏற்கனவே இந்த நடவடிக்கையை எதிர்த்து, பதிலுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அச்சுறுத்தியது.

இருப்பினும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், விலை உச்ச வரம்பை நாங்கள் பொருட்படுத்தவில்லை. நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

விற்பனை கிடையாது

விற்பனை கிடையாது

மேலும் விலை உச்ச வரம்புக்கு உட்பட்டு எண்ணெய் விற்பனை செய்யப் போவதில்லை என்றும், ஜி 7 நாடுகளின் கட்டுபாடுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஏர்கனவே ரஷ்யா தங்களது இழப்பீட்டினை சரிசெய்ய சீனா மற்றும் இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் முடிவானது எதிர்பார்த்த ஒன்று தான் எனலாம்.

இந்தியா தொடர்ந்து வாங்கும்

இந்தியா தொடர்ந்து வாங்கும்

இந்தியா தங்களுக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகள் மூலம் எண்ணெய் இறக்குமதி செய்யும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நாங்கள் என்பு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்குவோம். நாங்கள் தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம். ரஷ்யாவிலும் எண்ணெய் வாங்குவோம்.

 வரலாறு காணாத இறக்குமதி

வரலாறு காணாத இறக்குமதி

ரஷ்யா இந்தியாவின் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த மாதம் 19%ல் இருந்து, 23% ஆக அதிகரித்தது. ஈராக் இந்தியாவின் மிகப்பெரிய சப்ளையராக மாறியுள்ளது. சவுதி அரேபியாவை தாண்டி ரஷ்யா அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

கவலையில்லை

கவலையில்லை

ஆனால் தற்போது ஜி7 நாடுகளின் உச்ச வரம்பு அமலுக்கு வந்தால், அது இந்தியாவின் இறக்குமதியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் எரிபொருள் சப்ளையில் சவாலான நிலை இருந்து வருகின்றது. இந்த நிலையில் உச்ச வரம்பு குறித்து இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா முடங்கலாம்

ரஷ்யா முடங்கலாம்

ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் எண்ணெய் வருவாயினை முடக்கினால், போரிற்கான செலவினக் குறைக்கலாம். இதனால் போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ரஷ்யாவின் பொருளாதாரம் முடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How G7's Price capping on Russian oil affect india: Will it have an impact in India?

EU joins G7 countries to curb oil prices for Russia With the aim of controlling price increases, Russia imposed a price ceiling on oil.
Story first published: Saturday, December 3, 2022, 21:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X