பல விளம்பரங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி பதில் ஏதும் வராமல் இருப்பார்கள்.
வேலை தேடுபவர்கள் பலர் வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் பல விளம்பரங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி பதில் ஏதும் வராமல் இருப்பார்கள்.
பிறகு ஜாப் ஃபேர் போன்றவற்றுக்குச் செல்ல முயன்று உள்ளே கூட நுழைய முடியாமல் வெளியில் தள்ளப்பட்டிருப்பீர்கள். வேலை வாய்ப்புச் சந்தையில் பல பணிகள் காலியாக உள்ளன. ஆனால் அதில் சேர தான் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வந்தாலும் வேலை தேடுபவர்களும் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து ஓய்ந்து இருப்பார்கள்.
நம்பிக்கையை விட வேண்டாம். வேலையைத் தேட தேடு பொறிகள், சமுக வலைத்தளங்கள் மற்றும் ஜாப் ஃபேர்கள் தவிர்த்து இன்னும் சில வழிமுறைகள் உள்ளன. பல நிறுவனங்கள் வளர்ந்து வரும் இணைய உலகில் இணையதளம் மூலமாகவே கலந்துரையாடி நேரடியாக தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற ஊழியர்களைத் தேர்வு செய்கின்றனர். உலகின் விரிச்சுவல் கரியர் ஃபேருக்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு வேலை தேடுபவர்கள் தங்கள் நாடு மட்டும் இல்லாமல் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பணிகளுக்கும் கூடு அந்த நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொண்டு வீட்டில் இருந்த படியே எட்டிப்பிடிக்கலாம். ஆம், விண்ணப்பதாரர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வேலைக்கன நேர்முகத்தேர்வை முடிக்கலாம். ஆன்லைன் கரியர் நிகழ்வுகள் பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஜாப் ஃபேர்கள் போன்றதே காலியிடங்கள் உள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து தனக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பித்து நேரடியாக நிறுவன ஊழியர்களை இணையம் மூலமாகவே சந்திக்கலாம். இப்படி விரிச்சுவல் ஜாப் ஃபேர்களின் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது எளிதாக நிறுவனம் ஊழியர்களுடன் உரை தகவல், ஆடியோ மற்றும் வீடியோ அரட்டை அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் செய்யலாம் என்று கூறுகிறார் விஃபேர்ஸ்.காம்(vFairs.com) நிறுவனத்தில் பொது நிர்வாகி முகமது யூனஸ். ஒவ்வொரு வருடமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்களுக்காகப் பல ஆன்லைன் ஜாப் ஃபேர்களை நடத்தி வருகின்றது பேயட்.காம்(Bayt.com). அதில் குறைந்தது 3 ஐக்கிய அரபு அமீரகத்திலும் 6 மத்திய கிழக்கு நாடுகளில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு காலாண்டிலும் இது போன்று விர்ச்சுவல் ஜாப் ஃபேர்களில் இணையதளம் மூலம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை மிகவும் பிரபலமாகி வருவதாக ஒரு இணையதள வேலைவாய்ப்பு இணையதளத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வேலை தேடுபவர்களின் திருப்தி அளவுகளும் அதிகமாகவே உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் இருந்து இந்த இணையதள ஜாப் ஃபேர்களில் பங்கேற்கும் 10-ல் 6 பேர் முகவும் திருப்தியாக உள்ளதாகக் கடுத்து தெரிவிக்கின்றனர். விர்ச்சுவல் ஜாப் ஃபேர்கள் மூலம் வேலைக்குச் சேருவதும், வேலைக்கு ஆட்களை எடுப்பதும் மிகவும் எளிதாக உள்ளது என்று பேய்ட்.காம் தரப்பு கூறுகின்றது. இந்த நிகழ்வுகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இந்த நாட்டவர் மட்டும் தான் என்று இல்லாமல் எல்லோரும் பங்கேற்று நேர்முகத் தேர்வின் மூலம் வேலைப் பெறலாம். மேலும் இந்த ஆன்லைன் ஜாப் ஃபேர்கள் பல தரப்பு நிறுவனங்கள் அதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களில் இருந்து நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது இன்னொரு சிறப்பு.
புதிய வழிமுறைகள்
விரிச்சுவல் கரியர் ஃபேர்
ஆன்லைன் கரியர் நிகழ்வுகள்
எளிதாக நிறுவனம் ஊழியர்களுடன் கலந்துரையாடலாம்
ஜாப் ஃபேர்கள்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆதரவு
வேலை தேடுபவர்களின் திருப்தி
பேய்ட்.காம் கருத்து
தனி சிறப்பு
தனியார் முதல் அரசு நிறுவனங்கள் வரை
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications