உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கே இது தான் கதி! மற்ற நாடுகளுக்கு?

இன்றைய தேதிக்கு உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் என்றால் அது ராணுவ பலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது இல்லை.

அதிக பணம் கொண்ட அல்லது பணப் புழக்கம் கொண்ட, வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளைத் தான் சக்தி வாய்ந்த நாடுகளாக பட்டியல் போடுகிறார்கள்.

அப்படி பொருளாதார அடிப்படையில் பட்டியலிட்டால், 11 நாடுகள் வருகின்றன.

அந்த நாடுகள் பட்டியல்

அந்த நாடுகள் பட்டியல்

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, பிரேசில், கனடா, ரஷ்யா ஆகிய 11 நாடுகளை பொருளாதார அடிப்படையில் சக்தி வாய்ந்த நாடுகள் எனச் சொல்லலாம். இந்த 11 நாடுகள் உலக பொருளாதாரத்துக்கு என்ன செய்கின்றன..?

பலம்

பலம்

உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவிகிதம் பங்களிப்பு இந்த 11 நாடுகளில் இருந்து தான் வருகிறது. அதே போல உலக மக்கள் தொகையான 700 கோடி பேரில் இந்த 11 நாடுகளின் பங்களிப்பு மட்டும் சுமாராக 60 - 65 சதவிகிதம் வரும்.

கொரோனா

கொரோனா

இத்தனை பொருளாதார பலம் கொண்ட இந்த 11 நாடுகள், உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு எத்தனை பேரின் உயிரைப் பறி கொடுத்து இருக்கிறார்கள் என்று தான் பார்க்க இருக்கிறோம். முதலில் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் இருந்தே தொடங்குவோம்.

பெரியண்ணன்

பெரியண்ணன்

உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக அமெரிக்காவிலேயே 3,802 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. அதில் 69 பேரை காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் இல்லாத பணமா, அறிவியல் அறிவா, டெக்னாலஜியா அல்லது மருத்துவ வசதிகளா..? எல்லாம் இருக்கும் நாட்டிலேயே பலி எண்ணிக்கை கூடிக் கொண்டு இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை எடுத்துக் கொள்வோம். இந்த நாடுகளிலும் ஏறத் தாழ அமெரிக்காவுக்கு நிகரான நல்ல தரமான சுகாதார வசதிகள் உண்டு. பணம், பொருளாதார பலம், டெக்னாலஜி என எல்லாவற்றிலுமே இவர்களும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இவர்களால் கூட, தங்கள் மக்களை கொரோனாவுக்கு பலி கொடுப்பதில் இருக்கும் தடுக்க முடியவில்லை.

பலி

பலி

இந்தியாவில் இப்போது தான் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இப்போதே சுமார் 100 பேருக்கு மேல் கொரோனா பரவிவிட்டது. சுமார் 2 பேர் கொரோனா வைரஸுக்கு பலியும் ஆகிவிட்டார்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில், சீனாவைப் போல கொரோனா தலை விரித்தாடத் தொடங்கினால் எப்படி மீள முடியும் என்று தெரியவில்லை. நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இப்போது தான் கொரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இப்போதே சுமார் 100 பேருக்கு மேல் கொரோனா பரவிவிட்டது. சுமார் 2 பேர் கொரோனா வைரஸுக்கு பலியும் ஆகிவிட்டார்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில், சீனாவைப் போல கொரோனா தலை விரித்தாடத் தொடங்கினால் எப்படி மீள முடியும் என்று தெரியவில்லை. நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

மோசமான பரவல்

மோசமான பரவல்

இந்தியா கூட எப்படியாவது பணத்தை தயார் செய்து கொள்ளும் என நம்பலாம். ஆனால், பொருளாதார ரீதியாக அதிக பலம் இல்லாத ஈரானில் சுமார் 14,991 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 853 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். ஸ்பெயினில் 8,794 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் 297 பேர் மரணித்து இருக்கிறார்கள். இது போன்ற நாடுகளில் கொரோனா களம் இறங்கினால் யார் காப்பாற்றுவார்கள். சர்வதேச அமைப்புகள் யாரிடம் சென்று உதவச் சொல்லி பணம் கேட்கும்..? எல்லா பெரிய நாடுகளும் தங்களை பாதுகாத்துக் கொள்வதில் பிசியாக இருக்கிறதே..?

ஏழை நாடுகள்

ஏழை நாடுகள்

இன்னும் பொருளாதார ரீதியாக, பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கினால், யார், யாரைக் காப்பாற்றுவார்கள் என யூகிக்கவே பயமாக இருக்கிறது. எந்த நாடாவது விரைவில் மருந்தையோ அல்லது பரவாமல் தடுக்கும் முறையையோ கண்டு பிடித்தால் தானே ஒழியும்.? விரைவில் கண்டுபிடிப்பார்கள் என நம்புவோம். கொரோனா ஒழியட்டும், உலகம் மலரட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+