இந்தியாவில் பலருக்கும் அமெரிக்கா என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். படித்து முடித்து அமெரிக்கா சென்று விட வேண்டும் என நினைப்பதுண்டு.
பொதுவாக அமெரிக்கா உலகின் காஸ்ட்லியான நாடுகளில் ஒன்றாக உள்ளது. எனினும் மக்கள் அதிகம் விரும்பும் நாடாகவும் உள்ளது.
என்றேனும் யோசித்தது உண்டா? அமெரிக்காவில் வாழ எவ்வளவு பணம் வேண்டும் என்று?
யார் வசதியானவர்கள்
சிஎன்பிசி அறிக்கையின் படி, அமெரிக்கர்கள் 7,74,000 டாலர்கள் வைத்திருந்தால், நிதி ரீதியாக வசதியாக உள்ளவர்களாக கருதப்படுவார்கள் என சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் நகரினை பொறுத்து மேற்கண்ட தொகையானது மாறும்.
நியூயார்க் & சான்பிரான்சிஸ்கோ
நிதித் சேவை நிறுவனமான சார்லஸ் ஸ்ஷாப்பின் வருடாந்திட மாடர்ன் வெல்த்தின் ஆய்வறிக்கையின் படி, சான்ஃபிரான்சிஸ்கோ அல்லது நியூயார்க் போன்ற அதிக செலவினங்கள் உள்ள நகரங்களில், நீங்கள் வசதியாக வாழ 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்பு தேவைப்படும் என கூறுகின்றது.
சான்பிரான்சிஸ்கோ
சான்பிரான்சிஸ்கோவில், ஆய்வில் பதிலளித்தவர்களில் நிதி ரீதியாக வசதியாக இருக்க 1.7 மில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்டிருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய 12 மெட்ரோ நகரங்களில் நடத்திய ஆய்வில் சான்பிரான்சிஸ்கோ மிக காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாக உள்ளது.
மற்ற முன்னணி நகரங்கள்
அமெரிக்காவின் நிதி ரீதியாக வசதியாக இருக்க 2022ம் ஆண்டில் எவ்வளவு பணம் தேவை என்பதை பார்க்கலாம்.
- சான்பிரான்சிஸ்கோ - 1.7 மில்லியன் டாலர்
- நியூயார்க் நகரம் - 1.4 மில்லியன் டாலர்
- தெற்கு கலிபோர்னியா (லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் டியாகோ) - 1.3 மில்லியன் டாலர்
- சியாட்டில் - 1.2 மில்லியன் டாலர்
- வாஷிங்டன் - 1.1 மில்லியன் டாலர்
மில்லியன் டாலருக்கும் கீழ் இருந்தால் போதும்?
- சிகாகோ- 9,56,000 டாலர்கள்
- ஹூஸ்டன் - 9,19,000 டாலர்கள்
- போஸ்டன் - 8,92,000 டாலர்கள்
- டல்லாஸ் - 8,40,000 டாலர்கள்
- அட்லாண்டா - 7,71,000 டாலர்கள்
- போனிக்ஸ் - 7,47,000 டாலர்கள்
- டென்வர் - 6,71,000 டாலர்கள்
யாரிடம் ஆய்வு
இந்த ஆய்வானது கடந்த பிப்ரவரி 2022ல் நடத்தப்பட்டது. இது 500 - 750 உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்டது. இது அமெரிக்காவின் ஒவ்வொரு மெட்ரோ நகரங்களில் நடத்தப்பட்டது. இது 21 வயது முதல் 75 வயதானவர்கள் வரையில் நடத்தப்பட்டது.
மாறுபடக் கூடிய விஷயம்
ஒருவர் நிதி ரிதீயாக வசதியானவராக உள்ளார் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடிய விஷயம். இது சொந்த வீடு, சேமிப்பு, செலவினங்கள் என்பதை பொறுத்து மாறுபடும். எனினும் மேற்கண்ட விகிதங்கள் சுமாரான ஒரு கணக்கீடாகத் தான் உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications