பாகிஸ்தான் அரசு தன்னுடைய குடிமக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கு கூட முடியாமல் தவித்து வருகிறது. அப்படி இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானை பொருத்தவரை ராணுவம் மிகவும் அதிகாரம் மிகுந்த ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம். மற்ற அரசு துறைகளைப் போலவே பாகிஸ்தானிலும் ராணுவ ஊழியர்களுக்கு அடிப்படை பேஸிக் பே ஸ்கேல் என்ற அமைப்பு முறையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பொறுப்புக்கும் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற வகையில் ராணுவ வீரர்களுக்கான சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. India.com என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி பாகிஸ்தான் ராணுவத்தில் நுழைவு நிலையில் இருக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்கு உதாரணமாக ஜூனியர் கமிஷன் ஆபீஸர் பதவியில் இருப்பவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டு ரூபாய் மதிப்பில் 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பளத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
அடுத்ததாக நான் கமிஷன் ஆபீஸர்ஸ் என்ற பிரிவில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு பே ஸ்கேல் 5 மற்றும் 6இன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டு ரூபாய் மதிப்பில் 18 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஒரு இந்திய ரூபாய் என்பது பாகிஸ்தானின் 3.30 ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் 5 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
கணிசமான அனுபவத்துடன் பணியில் இருக்கும் மத்திய நிலை ராணுவ அதிகாரிகளுக்கு அதாவது கேப்டன்களாக இருப்பவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது 15 ஆயிரத்திலிருந்து 27 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். அதே போல ஆர்மி மேஜர் பொறுப்புகளில் இருக்கும் வீரர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை இந்திய ரூபாயின் மதிப்பில் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இது தவிர மத்திய அளவில் இருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கு வீட்டு வாடகை , போக்குவரத்து செலவு மற்றும் பிற அலோவென்ஸுகள் வழங்கப்படுகின்றன. மூத்த நிலை அதிகாரிகளாக அதாவது கலோனியல் மற்றும் பிரைகிரேடர்களாக இருப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பத்தினருக்குமான தங்குமிட செலவுகள் ,போக்குவரத்து செலவுகள் , மருத்துவ செலவுகள் உள்ளிட்டவற்றை ராணுவமே கவனித்துக் கொள்கிறது.
ராணுவ தளபதியாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர அவர்களுக்கு ஆடம்பர குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. மற்ற நாடுகளைப் போலவே பாகிஸ்தானிலும் ராணுவத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு பணி மட்டுமில்லாமல் மருத்துவ அதிகாரிகள். பொறியாளர்கள் ஆகிய பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சுமார் 18 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications