அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப், மிகப்பெரிய தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட், கிரிப்டோ முதலீடுகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் மூலமே ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த வருமானம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி இவருக்கு 600 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானமாக கிடைத்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 5000 கோடி ரூபாய்க்கு சமம். இதில் பெரும்பாலான வருமானம் கிரிப்டோ முதலீடுகள் மூலமே கிடைத்துள்ளன.

2024 ஆம் ஆண்டுக்கான தன்னுடைய வருமானம் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு இருக்கிறார் டிரம்ப். இதன்படி அவருக்கு கிரிப்டோ ,ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகள் மூலம் பெரிய அளவில் வருமானம் கிடைத்திருக்கிறது. டிரம்ப் மீம் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி மூலம் மட்டுமே இவருக்கு 320 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது. மேலும் பிற கிரிப்டோ டோக்கன்கள் மூலம் அவருக்கு சுமார் 72 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்திருக்கிறது.
மொத்தமாக டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கிரிப்டோ சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து அதாவது பிட்காயின் மற்றும் கிரிப்டோ ஈடிஎஃப் ஆகியவற்றின் மூலம் மட்டும் 2024 ஆம் ஆண்டில் 400 மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளனர். டிரம்ப் அமெரிக்காவின் பல இடங்களிலும் சொந்தமாக ரிசார்டுகள் மற்றும் கோல்ஃப் மைதானங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் அவருக்கு 217 மில்லியன் டாலர்கள் வருமானமாக வந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்தியாவில் கூட டிரம்ப் டவர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறது. இதன் மூலமும் இவருக்கு 30 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைத்திருக்கிறது. டிரம்ப் வாட்ச் என்ற கைக்கடிகார பிராண்டு மூலம் 2.8 மில்லியன் டாலர்களை இவர் சம்பாதித்துள்ளார்.
பல்வேறு முதலீடுகள் மூலமும் டிரம்ப் வருமானம் ஈட்டுகிறார். அதாவது 211 மில்லியன் டாலர்களுக்கு அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு வட்டி மற்றும் ஈவு தொகையாக மட்டும் 12 மில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கின்றன. அமெரிக்க அதிபராக பதவியில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வருமானம் அந்த வருமானம் எதன் மூலம் தங்களை வந்து சேர்ந்தது என்பது குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பது கட்டாயமாகும். அதன் அடிப்படையில் தான் டிரம்ப் தன்னுடைய வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications