அமெரிக்கா: உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர்தான் என்விடியா நிறுவனத்தின் ஜென்சென் ஹீவாங். இவர் ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலர்கள் வரியை செலுத்தாமல் தவிர்க்கிறார். இதற்கு இவர் பின்பற்றும் உத்திகள் என்ன என்பதை நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் துறைக்கு தேவையான சிப்களை தயாரித்து வழங்கும் நிறுவனம்தான் என்விடியா, இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் இதன் தலைமை செயல் அதிகாரியும் ,துணை நிறுவனருமான ஜென்சென் ஹூவாங்கின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது . தற்போது 61 வயதாகக்கூடிய ஜென்சென் ஹூவாங் அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 127 பில்லியன் டாலர்கள்.
பொதுவாக இது போன்ற அதிக வருமானம் ஈட்டக்கூடிய மற்றும் அதிக சொத்து வைத்திருக்கும் நபர்கள் அமெரிக்காவில் கணிசமான தொகையை எஸ்டேட் வரியாக செலுத்த வேண்டும். ஒருவரின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலரை கடந்துவிட்டால் அதில் 40%ஐ எஸ்டேட் வரியாக செலுத்தியாக வேண்டும். ஆனால் ஜென்சென் ஹூவாங் சில உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலர்கள் வரியை செலுத்தாமல் தவிர்க்கிறாராம்.
அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகளின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் இந்த விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 1916 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் எஸ்டேட் டேக்ஸ் வரியை அறிமுகம் செய்தது. ஆனால் இதில் பல்வேறு ஓட்டைகளை கண்டுபிடித்து பணக்காரர்கள் இந்த வரியை செலுத்தாமல் தப்பி விடுகின்றனர்.
இந்த எஸ்டேட் டேக்ஸினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அரசு வரியை வசூல் செய்திருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் 120 பில்லியன் டாலர்கள் வரியாக வசூல் செய்திருக்கலாமாம்.ஆனால் அதில் ஒரு சொற்பமான தொகையை தான் அரசாங்கம் பெற்றிருக்கிறது.
2012 ஆம் ஆண்டில் ஜென்சென் ஹூவாங் இந்த வரியில் இருந்து தப்புவதற்காக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அறக்கட்டளையின் நிறுவியதோடு என்விடியா நிறுவனத்தில் இருந்த 5.84 லட்சம் பங்குகளை இந்த அறக்கட்டளைக்கு என ஒதுக்கினார்.
அந்த சமயத்தில் இந்த பங்குகளின் மொத்த மதிப்பு 7 மில்லியன் டாலர்களாக இருந்தது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்து விட்டால் அவர்கள் எஸ்டேட் மற்றும் கிப்ட் டேக்ஸ்களில் இருந்து தப்ப முடியும். அதைத்தான் ஜென்சென் ஹூவாங் பின்பற்றி இருக்கிறார்.
தற்போது ஜென்சென் ஹூவாங் அறக்கட்டளை வைத்திருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பீடு 3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது அறக்கட்டளை பெயரில் இருப்பதால்தான் எந்த வரியும் செலுத்த தேவையில்லையாம். அதே போல அறக்கட்டளைக்கு நிதி வழங்குவதாக காட்டி வருமான வரியிலும் இவர் சலுகை பெறுகிறாராம்.
Story Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications