டிரம்ப் நிர்வாகம் – ஹார்வர்டு பல்கலை. மோதல்.. கேள்விக்குறியான 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம்..

அமெரிக்கா: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான மோதல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விகுறியாக்கி இருக்கிறது. தற்போது டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவை சேர்ந்த 788 மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது இந்தியாவில் இருக்கும் இந்த மாணவர்களின் பெற்றோருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோதலின் பின்னணி:

அமெரிக்க அரசு இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலுக்கு எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் நாட்டினுள் அனுமதிப்பது கிடையாது. இத்தகைய சூழலில் ஹார்வர்டு பல்கலைகழகம் டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்ப்பையும்ம் மீறி போராட்டத்தை நடத்த அனுமதி தந்துவிட்டது. இது தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகம் – ஹார்வர்டு பல்கலை. மோதல்.. கேள்விக்குறியான 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம்..

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களே காரணம்:

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே மோதல் தொடங்கி விட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர்.

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப்:

இஸ்ரேலுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் டிரம்ப் நிர்வாகத்தை கோபமடைய செய்தது. இந்த சூழலில் தான் அமெரிக்க அரசு தங்களின் கட்டுப்பாடுகளை ஏற்காத ஏற்க வில்லை என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சாட்டியது. மேலும் தங்களுடைய நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் அந்த பல்கலைக்கழகத்திற்கான 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நிறுத்தி டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடி கொடுத்தது.

நீதிமன்றத்தில் வழக்கு:

டிரம்ப் அரசுக்கு சொந்தமான பல்வேறு அமைச்சகங்களும் இது நாள் வரை ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கு வழங்கி வந்த அனைத்து விதமான சேவைகளையும் திடீரென நிறுத்திக் கொண்டன. இந்த சூழலில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது .

டிரம்ப் நிர்வாகம் – ஹார்வர்டு பல்கலை. மோதல்.. கேள்விக்குறியான 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம்..

மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்:

இதற்கு இடையே அமெரிக்க அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க எதிர்ப்பு , பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது, ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் யூத மாணவர்களை தாக்குவதற்கான சாத்தியமான சூழல்களை அனுமதிப்பது என தொடர்ந்து மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு வளாகமாக ஹார்வர்டு பல்கலைகழக வளாகம் உருவாகி இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை:

பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்க அரசு குற்றம்சாட்டுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடம் அமெரிக்க உள்துறை அமைச்சகம் அங்கே தங்கிப் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்ததாம் ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அந்த அமெரிக்க அரசு கேட்ட தகவல்களை வழங்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

டிரம்ப் நிர்வாகம் – ஹார்வர்டு பல்கலை. மோதல்.. கேள்விக்குறியான 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம்..

மாணவர் சேர்க்கை அங்கீகாரம் ரத்து:

தங்களுடைய எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் ஏற்காமல் செயல்பட்டதாலேயே ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

வெளிநாட்டு மாணவர்களின் நிலை என்ன:

அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைகழகமாக ஹார்வர்டு திகழ்கிறது. இங்கே கல்வி பயில்வதற்காகவே வெளிநாட்டு மாணவர்கள் பலர் வருகை தருகின்றனர். ஆனால் அதற்கே அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தற்போது அங்கே பயின்று வரக்கூடிய மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும் அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எத்தனை இந்திய மாணவர்கள் உள்ளனர்:

அமெரிக்காவின் அடையாளமாக இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 6800 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 788 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் பெரிய கவலையாக உருவெடுத்திருக்கிறது.

இந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு பட்டம் கிடைக்குமா?

ஏற்கனவே ஹார்வர்டில் பயிலும் இந்திய மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அமெரிக்க உள்துறை அமைச்சகமே பதிலும் தந்துள்ளது. இந்த செமஸ்டரில் தங்களுடைய டிகிரியை படித்து முடிக்கக்கூடிய இந்திய மாணவர்களுக்கு அவர்கள் பயின்று முடிந்ததற்கான பட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு தடை என்ற அறிவிப்பு 2025 -26 ஆம் கல்வியாண்டில் தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே இந்த செமஸ்டரில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அடுத்த வாரமே தங்களுடைய பட்டங்களை பெற இருக்கின்றனர்.

இந்த ஆண்டு படிப்பை முடிக்காத மாணவர்கள்:

இந்த ஆண்டு தங்களுடைய படிப்பை முடிக்காத மாணவர்கள் ஹார்வர்டு பல்கலைகழத்தில் இருந்து வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும், இல்லை என்றால் அமெரிக்காவில் தங்கி கல்வி பயில்வதற்கான சட்டபூர்வமான உரிமையை அவர்கள் இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் வேறு கல்லூரிக்கு மாறுவது தான் ஒரு வழி.

இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் நிலை என்ன?

இந்த ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து அதில் தேர்வான இந்திய மாணவர்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. தற்போதைக்கு அமெரிக்க அரசு வெளிநாட்டு மாணவர்கள் வந்து கல்வி பயில்வதற்கு தடை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அரசின் நிபந்தனைகளை 72 மணி நேரத்திற்குள் ஏற்க வேண்டும் அவ்வாறு நடக்கும் போது அமெரிக்க அரசு தடையை திரும்ப பெறும் எனவே இந்த ஆண்டு புதிதாக அட்மிஷன் பெற்ற மாணவர்கள் வழக்கம்போல அங்கே சென்று கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

FAQs
தற்போது அங்கே பயிலும் இந்திய மாணவர்களின் நிலை என்ன?

தற்போது அங்கே பயின்று வரக்கூடிய மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும் அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு பிரச்சினை இல்லை அவர்களுக்கு பட்டம் கிடைத்துவிடும்.

ஹார்வர்டு பல்கலைகழகம் மீது டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது, பல்கலைகழகத்துக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கும் டிரம்ப் நிர்வாகத்துக்கும் என்ன மோதல்?

ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+