சீனாவை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய ஆடம்பர காரை டாக்சியாக மாற்றி வாடகைக்கு விட்டு ஒரு நாளைக்கு 59 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த யுவான் என்ற முப்பது வயது இளைஞர் தன்னுடைய ஆடம்பர காரை வாடகை காராக மாற்றியிருக்கிறார் அண்மையில் இவர் மெர்சிடிஸ் நிறுவனத்தின் Maybach S480 காரை வாங்கி இருக்கிறார். இந்திய ரூபாயின் மதிப்பில் இது 1.80 கோடி ரூபாய் ஆகும். கடந்த நவம்பர் 1ஆம் தேதி இந்த காரை வாங்கி அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதனை அடுத்து சமூக வலைதள பக்கத்தில் இந்த கார் குறித்தும் இந்த காரின் சிறப்புகள் குறித்தும் இதில் பயணம் செய்வது மிகச் சிறந்த ஒரு அனுபவத்தை தரும் என்பதும் குறித்தும் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த சூழலில் அவர் தன்னுடைய இந்த ஆடம்பர காரை வாடகை காராக மாற்றியிருக்கிறார். இந்த வாடகை காரில் ஒரு முறை பயணம் செய்வதற்கு இவர் 59 ஆயிரம் ரூபாய் வசூல் செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன. இதற்காக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் "Old Yuan Drives a Maybach for Ride-Hailing" என்ற பெயரில் ஒரு பக்கத்தை திறந்து இருக்கிறார். இதனை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்.
யுவான் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்தே இதுபோல ஆடம்பர கார்களை வாங்கிய அவற்றை வாடகைக்கு விட்டு வருகிறாராம். ஏப்ரல் 13ஆம் தேதி இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தன்னுடைய ஒரு நாள் எப்படி செல்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த ஒரு நாளில் தன்னுடைய காரை வாடகைக்கு பயன்படுத்தி 40000 ரூபாயை சம்பாதித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போதைக்கு இந்த கார் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் மட்டுமே வாடகைக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்க அவர் காரை வாங்குவதற்காக அவர் 79.7 லட்சம் ரூபாயை டவுன் பேமெண்டாக செலுத்தினாராம். 58.6 லட்சம் ரூபாயை 6 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து வழங்கியிருக்கிறார். மீதமுள்ள பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார் இதற்காக அவர் ஒரு மாதத்திற்கு 1.7 லட்சம் ரூபாயை ஈஎம்ஐ-ஆக செலுத்துகிறாராம்.
பலருக்கும் இதுபோன்ற உயர் ரக காரில் பயணம் செய்ய வேண்டும் ,சொந்தமாக வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் .ஆனால் இதன் விலை அவர்களின் ஆசையை நிறைவேற்ற விடாமல் செய்துவிடுகிறது. இது போன்ற காரில் பயணம் செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை வாடகை காராக மாற்றியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தனக்கு வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு மாதாந்திர ஈஎம்ஐ செலுத்துவதாகவும் மீதமுள்ள பணத்தில் தான் சௌகரியமான வாழ்க்கை வாழ்வதாகவும் கூறியுள்ளார். இந்த காருக்காக ஒரு மாதத்திற்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications