அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். குறிப்பாக ஹெச்1பி விசா மாணவர்களுக்கு வழங்கக்கூடிய எஃப்1 விசா உள்ளிட்டவற்றில் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மிகத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தி தான் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.
கோல்டு கார்டு: அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டும் என எண்ணுபவர்களுக்கு கோல்ட் கார்டு எனப்படும் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதமே இந்த கார்டு எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தையும் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

ரூ.42.79 கோடி கட்டணம்: கோல்டு கார்டு என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 42.79 கோடி முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கிறது. அதாவது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற 5 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் என்பதே இதன் நிபந்தனை. இதனை கோல்டு கார்டு என்றும் டிரம்ப் கார்ட் என்றும் அழைக்கின்றனர்.
இணையதளம் அறிவிப்பு: தற்போது வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அதிகாரபூர்வ இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளமான டிரூத் சோசியல் பக்கத்தில் "உலகிலேயே மிகச்சிறந்த நாடான அமெரிக்காவில் குடியேறுவதற்கான கோல்டன் கார்டு விசா பெறுவது எப்படி என பலரும் என்னிடம் கேட்டனர், இதோ இணையதளம் வந்துவிட்டது" என கூறியுள்ளார்.
கிரீன் கார்டுக்கு மாற்றாக கோல்டு கார்டு: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்றால் வெளிநாட்டவர்கள் கிரீன் கார்டு பெற வேண்டும். ஆனால் அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கிரீன் கார்டுக்கு ஒரு மாற்றாக தான் கோல்டு கார்டு என்ற திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பக்கூடிய நபர் 5 மில்லியன் டாலர்களை செலுத்தி இந்த கோல்டு கார்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் உரிமை கிடைக்கும்.
எப்படி விண்ணப்பம் செய்வது?: விருப்பம் உள்ள நபர்கள் https://trumpcard.gov என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் பெயர் ,நாடு மற்றும் பிற விபரங்களை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாக காத்திருப்போர் பட்டியலில் உங்களுடைய பெயர் சேர்க்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது . இதற்கு தனிநபராகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது ஒரு தொழில் நிறுவனமாகவும் விண்ணப்பம் செய்யலாம் .
இந்தியர்கள் ஆர்வமா? : இந்த விண்ணப்பத்தில் ஒரு நபர் அவருடைய வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தினருக்கு என கோல்டு கார்டினை பெற முடியும். நிறுவனங்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக கோல்டு கார்டு விண்ணப்பம் செய்யலாம். தற்போதைக்கு இதில் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுகின்றன. கூடிய விரைவில் எப்படி இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த இணையதளம் தொடங்க தொடங்கிய உடனே ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்து விண்ணப்பம் செய்து இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications