அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற மசோதா அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களையும் , இந்தியாவின் அந்நிய செலாவணி வரவையும் கடுமையாக பாதிக்க உள்ளது.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய மசோதாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பும்போது அதற்கு 5 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹெச்1பி விசா, எஃப் 1 விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

The One Big Beautiful Bill என பெயரிடப்பட்ட இந்த மசோதாவின் 327 ஆவது பக்கத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் தாங்கள் அனுப்பக்கூடிய பணத்தில் 5 சதவீத தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அதிகமான அளவு பணம் அனுப்பப்படக்கூடியது அங்கே வசிக்கும் இந்தியர்கள் தான். எனவே இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கக்கூடிய இந்தியர்களும் இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய குடும்பங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய வரி நடைமுறையால் இந்தியா ஆண்டுதோறும் 12 இல் இருந்து 18 பில்லியன் டாலர்கள் வரையிலான டாலர்களை வரவை இழக்கக்கூடும் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் ,அமெரிக்காவில் தங்கி கல்வி பயிலக் கூடிய மாணவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த வரி விதிப்பு நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்பட உள்ளனர்.
பணம் அனுப்பும் நபர் அமெரிக்க குடிமகனாக இல்லை என்ற பட்சத்தில் அவர் அனுப்புவது குறைந்தபட்ச தொகையாக இருந்தால் கூட 5 சதவீத வரியை செலுத்த வேண்டும். எந்த ஒரு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வரம்போ இதில் இல்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கிறது. 100 டாலரை அனுப்பினாலும் 5 சதவீத வரி, 100000 டாலரை அனுப்பினாலும் 5 சதவீத வரி என விதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமெரிக்க குடிமக்கள் அல்லாத நபர் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் போது அவர் பயன்படுத்தும் வங்கி அல்லது பண பரிமாற்ற செயலியே 5 சதவீத வரியை பிடித்தம் செய்து கொண்டு அதனை அமெரிக்க அரசுக்கு செலுத்திவிடும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 2.3 மில்லியன் இந்தியர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
ஹெச்1பி விசா, எஃப் 1 விசா என்பன உள்ளிட்ட பல்வேறு விசா திட்டங்களின் கீழ் இந்தியர்கள் அங்கே வசிக்கிறார்கள். பலரும் அங்கே தங்கி வேலை செய்துவிட்டு தாய்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் பணம் அனுப்புகிறார்கள். ஆனால் இந்த மசோதா சட்டமானால், அவர்கள் இனி தாய் நாட்டிற்கு பணம் அனுப்ப கூடுதலாக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் 23 பில்லியன் டாலர்களை தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் . அதாவது இந்தியா வெளிநாட்டிலிருந்து பெற்ற மிகப் பெரிய ஒரு தொகையாக இது பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியா பெரும்பாலான வெளிநாட்டு கரன்சியை அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் மூலமாக பெறுகிறது. இதில் 5 சதவீத வரி என்பது நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது ஓராண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் வரை நமக்கான வரவு குறைந்துவிடும்.

உதாரணமாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு நபர் இந்தியாவில் இருக்கும் குடும்பத்திற்கு 1000 டாலர்களை அனுப்பி வைக்கிறார் என்றால் அதில் 50 டாலர்கள் அமெரிக்க அரசுக்கு வரியாக சென்று விடும். எனவே ஒவ்வொரு ஆயிரம் டாலருக்கும் அந்த நபர் 50 டாலர்களை அனுப்ப வேண்டும். தன்னுடைய குடும்பத்திற்கு 1000 டாலரும் சென்று சேர வேண்டும் என்றால் 1050 டாலரை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்.
இதனிடையே குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் எனும் அமைப்பு டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய வரி அறிமுகம் செய்யப்பட்டால் ஓராண்டுக்கு இந்திய குடும்பங்கள் சுமார் 12 இலிருந்து 18 பில்லியன் டாலர்கள் வரை இந்தியா இழக்க கூடும் என கூறுகிறது. இவ்வாறு வரக்கூடிய டாலரின் அளவு குறைகிறது என்றால் அது ரூபாயின் மதிப்பை மேலும் வலுவிழக்க செய்யும். ஒவ்வொரு டாலருக்கும் ஒரு ரூபாயிலிருந்து 1.5 வரை ரூபாய் வரை மதிப்பு குறைய தொடங்கும், எனவே ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை வலுவாக வைத்திருக்க வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும்.
குறிப்பாக கேரளா, உத்திரபிரதேசம் , பீஹார் ஆகிய மாநிலங்கள் தான் அதிக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை பெறுகின்றன இந்த மாநிலங்களில் சில தாக்கம் ஏற்படலாம். பிள்ளைகளை வெளிநாட்டில் வேலை செய்து பெற்றோர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இதுநாள் வரை வந்த தொகையை விட இனி குறைந்த தொகையே கைக்கு கிடைக்கும், அல்லது அவர்களின் பிள்ளைகள் கூடுதல் தொகையை அனுப்ப வேண்டும்.
இது அவர்களின் செலவினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பதால் இது மேலும் அவர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த ஐந்து சதவீத வரிவிதிப்பு என்ற நடவடிக்கையானது சட்ட ரீதியாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தண்டிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஹெச்1பி மற்றும் மாணவர்களுக்கான எஃப் 1 ஆகிய விசாக்கள் மூலம் முறையாக ஆவணங்களை சமர்ப்பித்து அமெரிக்காவில் சென்று நேர்மையாக வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியர்களுக்கு இது ஒரு தண்டனையாக அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த ஐந்து சதவீத வரி விதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பலரும் மாற்று வழிகளையும் ஒழுங்குமுறைப்படுத்தாத வழிமுறைகளையும் கையாண்டு தாயகத்திற்கு பணம் அனுப்புவதற்கான வாய்ப்புள்ளது. இது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் பல்வேறு மோசடிகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. மேலும் உலகிலேயே வெளிநாட்டவர்கள் வந்து வேலை செய்ய தகுதியற்ற ஒரு நாடாக அமெரிக்காவை மாற்றும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக மெக்சிகோ அரசு, அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை ஏற்க முடியாது என்றும், ஏற்கனவே அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ நாட்டவர்கள் தங்களின் வருமானத்திற்கு வரி செலுத்துகிறார்கள், தற்போது பணம் அனுப்பவும் வரி விதிப்பது என்பது இரட்டை வரிவிதிப்பாக மாறும் என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications