சீனாவின் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமாகத் திகழும் சீனா ஏவர்கிரான்டே குரூப் நிறுவனத்தின் தலைவர் ஹூயி கா யான்-இன் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 10 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 3 மடங்கு அதிகரித்துச் சீன ரியல் எஸ்டேட் சந்தையை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
பங்குச்சந்தை
ஹாங்காங் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்புத் திங்கட்கிழமை 17 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை 14.52 ஹாங்காங் டாலராக உயர்ந்துள்ளது.
132 சதவீதம் உயர்வு
சீனா ஏவர்கிரான்டே குரூப் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தில் ஹூயி கா யான் பெயரில் இருக்கும் பங்கு மதிப்பும் உயர்ந்து நிலையில் இவரின் சொத்து மதிப்பு சுமார் 17.2 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.
17.2 பில்லியன் டாலர்
இந்தத் திடீர் உயர்வின் மூலம் ஹூயி கா யான்-இன் சொத்து மதிப்பு 17.2 பில்லியன் டாலராக உயர்ந்து சீனாவின் 6வது மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.
சீன ரியல் எஸ்டேட்
சீன ரியல் எஸ்டேட் சந்தையில் கொடிகட்டி பறக்கும் சீனா ஏவர்கிரான்டே குரூப், பங்குச்சந்தையில் பைபேக், சீனாவின் சிறிய நகரங்களில் வீடு விற்பனையில் எண்ணிக்கையில் உயர்வு எனப் பல சாதகமான சூழ்நிலையில் இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
லாபம் மற்றும் வருவாய்
அதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபமும் சந்தை கணிப்புகளையும் தாண்டி அதிகமான அளவில் இருந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தனர். இதன் காரணமாகவே நிலையான வளர்ச்சியில் நிறுவனத்தின் மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
முக்கியப் பணக்காரர்கள்
இந்நிலையில் ஹூயி கா யான், கூகிள் நிறுவனத்தின் லேரி பேஜ், செர்ஜி பிரின், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரை விடவும் அதிகமான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications