கொரோனாவை விட கடந்த வாரத்தில் அதிகம் பர பரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் கச்சா எண்ணெய் விலை. உலகமெங்கும் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் குறையவில்லையே என்பது இந்தியர்களின் பெரிய கவலையே.
சரி சரி அத விடுங்க? நாம் சப்ஜெக்ட்டுக்கு வருவோம். ஒரு புறம் கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் மக்களை வாட்டி வதைத்தும் வரும் நிலையில், மக்களுக்கு சிறிது ஆறுதல் கொடுக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தது.
ஆனால் அந்த சிறு நன்மையும் இந்தியாவில் இல்லை என்பது வேறு..
உற்பத்தி நாடுகளுக்கு வேதனை
கச்சா எண்ணெய் விலை இப்படி தாறுமாறாக வரலாறு காணாத அளவு குறைந்து வருவது சில நாடுகளுக்கு நன்மையே கொடுத்தாலும், மறுபுறம் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மரண வேதனை கொடுத்து வருகிறது எனலாம். குறிப்பாக கொரோனாவால் மிக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு இது பலத்த அடியை கொடுத்துள்ளது எனலாம்.
சரியும் கச்சா எண்ணெய் விலை
கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ப்யூச்சரில் -37 டாலருக்கு சென்றது. இது கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களையும், உற்பத்தியாளர்களையும் மிக கவலையில் ஆழ்த்தியது எனலாம். ஏனெனில் ஏற்கனவே கொரோனாவில் கடந்த மாதசம் சராசரியாக பேரலுக்கு 20 -22 டாலர்களாக இருந்து வந்தது.
தேவை வீழ்ச்சி
கொரோனாவால் உலகமே லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் தேவையானது வெகுவாக குறைந்தது. இன்னும் சொல்லப்போனால் கச்சா எண்ணெய் வைக்க கூட உலகில் இடமில்லாமல் போகலாம் என்று கூறப்பட்டது. அதாவது அந்தளவுக்கு கச்சா எண்ணெய் சேமிப்பானது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வரலாறு காணாத அளவு சரிவு
இது அமெரிக்க வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு இப்படி சரிந்தது எனலாம். சரி இந்தளவுக்கு அதள பாதாளம் நோக்கி செல்ல என்ன காரணம். கொரோனாவினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், தேவையானது பெருமளவில் குறைந்து விட்டது. மேலும் தொழில்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் அவற்றிற்கான எரிபொருள் தேவையும் குறைந்தது.
இனியும் தேவை குறையும்
அதிலும் கச்சா எண்ணெயை அதிகலவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் தற்போது தான் தாக்கம் அதிகரிக்கும் (இந்தியா) இன்னும் தேவையானது பெரும் அளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவால் உற்பத்தி நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எண்ணெய் வைக்க இடமில்லை
கொரோனா வைரஸினால் எண்ணெய் தேவை குறைந்து வரும் நிலையில், எண்ணெய் சேமிக்க இடமில்லாமல் போகலாம் என உலக நாடுகள் அரண்டு போயுள்ளன. அதே நேரத்தில் சவுதியும், ரஷ்யாவும் அதிகளவு விநியோகத்தால் உலகத்தினையே முழ்கடித்தன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு பணம் சம்பாதிப்பது சாத்தியமில்லாத அளவுக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத மோசம்
மே மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமையன்று எதிர்மறையாக மாறியது, இது கடந்த 1983ம் ஆண்டில் நைமெக்ஸ் எண்ணெய் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இப்படி ஒரு மோசமான் சரிவினை காணவில்லை என்பதே உண்மை. அந்த நாள் எண்ணெய் சந்தையில் மிக மோசமான ஒரு நாளாக கருதப்பட்டது.
திவால் நிலைக்கு தள்ளப்படலாம்
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், இந்த விலை சரிவால் மேற்கொண்டு திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பிரச்சனையினால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பிரச்சனையாக மீண்டும் அமையக்கூடும்.
உற்பத்தி குறைப்புக்கு ஒப்புதல்
எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், டிரம்பின் தலையீட்டுக்கு பின்னர் சவுதியும், ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஒப்புக் கொண்டுள்ளன. இது மேற்கொண்டு எண்ணெய் விலை சரிவினைக் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனாவின் தாக்கம் இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கும் என்றும் தெரியவில்லை. ஆக கச்சா எண்ணெய் நுகர்வானது எப்போது மீண்டும் வரும் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
பங்கு சந்தையிலும் வீழ்ச்சி
இதற்கிடையில் அமெரிக்காவின் பங்கு சந்தையில் S&P 500's energy sector குறியீடு 40% கீழாக குறைந்துள்ளது. ஆக மேற்கண்ட இந்த எண்ணெய் பேரில் எந்த நிறுவனம் ஜெயித்து இருக்கும், எந்த நிறுவனம் திவாலாகும் என்பதே தற்போது அமெரிக்காவின் பெரும் கவலைகளில் ஒன்றாக இருக்கலாம். எப்படியோ அதிபர் டிரம்புக்கு தொடர்ந்து பிரச்சனை அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications