ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா!

தென் கொரியாவைக் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் ஹூண்டாய். இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா சுமார் 330 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்காவின் சுகாதார விதிகளை மீறும் விதமாக, அதிக மாசுகளை ஏற்படுத்தக் கூடிய டீசல் இன்ஜின்களை இறக்குமதி செய்தது தொடர்பாக, இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா.

ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா!

இது குறித்து அமெரிக்கா முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இந்த விதிமீறல் இன்ஜின்களைக் கொண்ட 2,300 வாகனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா நீதித்துறை, அமெரிக்க மக்களின் ஆரோக்கியதுக்கு கேடு விளைவிக்கும் இந்த மாதிரியான இன்ஜின்களை லாப நோக்கில் மட்டும், ஹூண்டாய் இறக்குமதி செய்வதாகவும், இது போன்று மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை, ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அமெரிக்க நீதி மன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2015லியே கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா சுகாதாரத்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது என்றும், இது தவிர ஏற்கனவே, இதே போல முன்னரே ஹூண்டாய் நிறுவனத்துக்கு சுமார் 14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளது.

ஒரு புறம் இப்படி எனில் மறுபுறம் இந்த நிறுவனம், ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் விற்பனை படு ஜோராக சென்றிருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த ஜூலை 9, 2019 அன்று அறிமுகப்படுத்திய இந்த கார், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்த காரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, தேர்தெடுக்கப்பட்ட 11 நகரங்களில் உள்ள 15 டீலர்களுக்கு 25 யூனிட்களை அனுப்பி வைத்தாகவும், ஆனால் ஜூலை மாதத்திலேயே 17 கார்களை விற்றுள்ளதாகவும், இதே ஆகஸ்ட் மாதத்தில் 88 யூனிட்களும், இது தொடங்கப்பட்ட மூன்று மாதத்திற்குள்ளேயே 130 யூனிட்களை தாண்டியுள்ளது என்றும், இது தவிர CKD ரக கார்களுக்காக 152 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒலா உபெர் போன்ற டாக்சி நிறுவனங்கள், தங்களது கார் சேவையில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் சேர்த்துக் கொள்ள நினைப்பதாகவும், இதனால் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+