வாஷிங்டன் : பேச்சு வார்த்தை என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது ஒரு புறம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது ஒரு புறம் நடக்கட்டும். ஆனால் சீனாவோடு இப்போதைக்கு வர்த்தக ஒப்பந்த செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளராம்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், நாங்கள் சீனாவுடன் தொடர்ந்து நல்லுறவில் தான் இருக்கிறோம். தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எனினும் தற்போது சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தும் எந்த எண்ணமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் என்ன தான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை, அடுத்து செப்டம்பர் முதல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும், 300 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு 10 சதவிகித வரியை விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை
அமெரிக்காவில் சீனப் பொருட்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுவதால், விலையும் மலிவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் முன்னரே அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு, முன்பு இருந்ததை விட கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்தார்.
மீண்டும் அதிக வரி
அதன்பின்னர், மேலும் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் உயர்த்தினார். இந்த நிலையில் இந்த வரிவிதிப்பை வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளாதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே சீனாவின் வர்த்தகம், அமெரிக்காவின் வரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவும் அமெரிக்கா பொருட்களுக்கு ஒரு கட்டத்தில் வரி அதிகரிப்பை செய்தது. இதனால் வர்த்தக போர் என்பது முடிவுக்கு வராமல், நாளுக்கு நாள் அதிகமான நிலையில், தற்போது இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
பேச்சு வார்த்தைக்கு முடிந்த பாடில்லை
எனினும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால் இன்று வரை இந்த பேச்சு வார்த்தை சரியான முடிவை எட்டப்படாததால், இன்று வரை தொடர்ந்து, பேச்சு வார்த்தை நடந்து கொண்டே தான் இருக்கிறது.
சீனா ஒப்பந்தம் போட தயாராக உள்ளது
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது கருத்து கூறுகையில், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இந்த பிரச்சனையால் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications