நான் சர்வாதிகாரி.. ஆனா.. டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!

உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை "சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டாவோஸ் நகரில் நேற்று டிரம்ப்-ன் பல முக்கியமான விஷயங்களை பேசினார், அதில் முக்கியமா கிரீன்லாந்து நாட்டை ராணுவ உதவியுடன் கைப்பற்றப்போவதுகிடையாது என்பதும், ஐரோப்பா மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பு நடைமுறைக்கு வராது என்ற தகவல் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயினும் டிரம்ப் தன்னை "சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தியது. ஆனால் இந்த சர்வாதிகாரத்துவம் பொது அறிவு அடிப்படையிலான தலைமைத்துவம் என்று அவர் விளக்கினார். டாவோஸ் உரைக்குப் பிறகு நடந்த சந்திப்பில் டிரம்ப் இவ்வாறு கூறினார்.

நான் சர்வாதிகாரி.. ஆனா.. டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!

டாவோஸ் நிகழ்ச்சியில் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தனது பேச்சு நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், வழக்கமான விமர்சனங்களை மீறி நல்ல மதிப்பீடுகள் கிடைத்ததாகவும் கூறினார். "பொதுவாக என்னை கொடூரமான சர்வாதிகாரி என்று சித்தரிப்பார்கள்" என்று குறிப்பிட்ட டிரம்ப், "நான் சர்வாதிகாரி தான், ஆனால் சில சமயங்களில் சர்வாதிகாரத்துவம் தேவைப்படுகிறது" என்று விளக்கினார்.

தனது ஆட்சி முறையை அரசியல் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், பொது அறிவை அடிப்படையாகக் கொண்டது என்று விளக்கினார். மேலும் தனது முடிவுகள் காலமாக காலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் செயல்முறையை தாண்டியது எனவும் தெரிவித்தார்.

மேலும் நேற்று டிரம்ப் பேசும் போது கிரீன்லாந்தை ஐஸ்லாந்து என பல முறை மாற்றி கூடியும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் கிரீன்லாந்து மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியது அமெரிக்கா - ஐரோப்பா மத்தியிலான உறவில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆயிழும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இரு நாடுகள் மத்தியிலான செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

நேற்று டாவோசில், NATO பொதுச்செயலாளர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, கிரீன்லாந்து தொடர்பாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் நீண்டகால உறவை மேற்கொள்ள முயற்சிகள் எடுப்பதாக டிரம்ப் கூறினார். ரஷ்யா மற்றும் சீனா கிரீன்லாந்தில் ராணுவ தளம் அமைப்பதை தடுப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

முன்பு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு வரி அச்சுறுத்தல் விடுத்த டிரம்ப், இப்போது அந்த வரிகளை விதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே தனது திட்டம் என்றும் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+