வாஷிங்டன், அமெரிக்கா: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கிட்டதட்ட 12 நாட்களாக நடந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. தற்காலிகமாக மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடங்கியது. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்களாக பயங்கர மோதல்கள் ஏற்பட்டன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான போர் பதற்றம் உண்டானது. இந்த மோதலில் திடீரென அமெரிக்கா நுழைந்து ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. இதனை அடுத்து ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார் . தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சற்றே நிம்மதி ஏற்பட்டு இருக்கிறது .

இந்த சூழலில் தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிருடன் இருப்பதற்கே நான் தான் காரணம் என கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான போரை வென்று விட்டோம் என்று கமேனி கூறி இருக்கிறார், அது பொய் என்பது அவருக்கே தெரியும் என டிரம்ப் கூறியுள்ளார். ஒரு நாட்டின் தலைவராக இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பொய்யை அவர் கூறலாமா என டிரம்ப் வினவியுள்ளார்.
அயத்துல்லா அலி கமேனி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருந்து தப்பித்து எங்கு மறைந்து இருந்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும் , நான் அவரை மிகப்பெரிய படுகொலையில் இருந்து காப்பாற்றி இருக்கிறேன் அதற்கு அவர் நன்றி கூட கூற தேவையில்லை ஆனால் இப்படி பொய் கூறாமல் இருக்கலாமே என டிரம்ப் தன்னுடைய பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் ஈரான் தலைநகர் டெஹ்ரானை நோக்கி அதிக எண்ணிக்கையிலான விமானத்தை அனுப்பி இருந்தது. அங்கே மிகப்பெரிய தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் நான் கூறிய வார்த்தைக்காக அவர்கள் தாக்குதலை நடத்தாமல் திரும்ப வந்தனர் என கூறியிருக்கிறார். நான் தலையிடவில்லை என்றால் கமேனி இந்நேரம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என கூறி இருக்கிறார்.
முன்னதாக ஈரான் கமேனி, இந்த போரில் இஸ்ரேல் அழிந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டுதான் அமெரிக்கா தானாக இந்த விஷயத்தில் தலையீடு செய்து போர் நிறுத்தத்திற்கு வித்திட்டது எனக் கூறியிருந்தார் , மேலும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் நாம் வெற்றி அடைந்துவிட்டோம் என்றும் கமேனி தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் டிரம்ப் , கமேனி உயிரை நான் காப்பாற்றினேன் அவருக்கு நன்றி இல்லை என கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!



Click it and Unblock the Notifications