உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் வன்பொருள் சேவை நிறுவனமான ஐபிஎம், பெங்களுரை தலைமையாக கொண்டு டிசாஸ்டர் ரெக்கவரி சேவை வழங்கும் சனோவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
இந்த கைப்பற்றும் திட்டம் 2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிளவுட் ரெக்கவரி, கிளவுட் மைகிரேஷன் மற்றும் பிஸ்னஸ் கன்டினீவிட்டி சாப்வேர் சேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
சனோவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டிசாஸ்டர் ரெக்கவரி சேவை வழங்க முடியும் என ஐபிஎம் தெரிவித்துள்ளது.

ஆனால் கைப்பற்றும் திட்டத்தின் பண பரிமாற்றம் குறித்து எவ்விதமான தகவல்களையும் ஐபிஎம் வெளியிடவில்லை.
சனோவி டெக்னாலஜிஸ் நிறுவனம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பகுதிகளில் பல வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
ஐபிஎம் நிறுவனம் தற்போது 68 நாடுகளில் 300 குளோபல் டெலிவரி டேட்டா சென்டர் மற்றும் 46 ஐபிஎம் கிளவுட் டேட்டா சென்டர் வைத்துள்ளது.
சனோவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கைப்பற்றுதல் மூலம் ஐபிஎம் 68 நாடுகளிலும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனத்தின் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications