பெங்களூரு: உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனமான ஐபிஎம், தொடர்ந்து 13 காலாண்டுகளாக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
மந்தமான வர்த்தகம்
2015ஆம் ஆண்டின் 2வது காலாண்டு முடிவுகளை இந்நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்டது. இதில் மந்தமான வர்த்தக விரிவாக்கம் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியால் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை
காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் 5 சதவீதம் சரிந்துள்ளது.
20.81 பில்லியன் டாலர்
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 20.81 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 24.05 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
(ஐபிஎம் நிறுவன தலைவர் வெர்ஜினியா ரோமிட்டி பற்றி செய்திகள்)
விற்பனை
நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த கடந்த வரும் ஐபிஎம், தனது எக்ஸ்86 சர்வர் வர்த்தகத்தை லெனோவோ நிறுவனத்திற்கு விற்றது.
8% சரிவு
கடந்த ஒரு வருடமாகப் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்கும் ஐபிஎம் நிறுவன பங்குகள் சந்தையில் 8 சதவீதம் வரை சரிந்து 173.22 டாலராக உள்ளது.
(உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செய்திகளை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications