3 வருடங்களாகத் தொடர் வர்த்தகச் சரிவில் சிக்கித் தவிக்கும் ஐபிஎம்!

ஆர்மான்க், நியூயார்க்: வன்பொருள், மென்பொருள் மற்றும் கிளவுட் கம்பியூடிங் துறையில் உலகின் முன்னணி நிறுவனமான திகழும் ஐபிஎம் நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த 12 காலாண்டுகளாக ஆதாவது 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 12 சதவீத சரிவைச் சந்தித்துள்ளதாக ஐபிஎம் தெரிவித்துள்ளது.

லாபமற்ற நிறுவனம்

லாபமற்ற நிறுவனம்

இந்நிறுவனத்தின் வர்த்தகம் தொடர் சரிவைச் சந்தித்து வருவதால் ஐபிஎம் லாபமற்ற நிறுவனமாகச் சந்தையில் கருதப்படுகிறது. இதனால் இந்நிறுவனத்தின் மீதான முதலீட்டு அளவு அதிகளவில் குறைந்துள்ளது எனச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

பங்குச்சந்தையில் ஐபிஎம்

பங்குச்சந்தையில் ஐபிஎம்

2015ஆம் ஆண்டின், முதல் காலாண்டு முடிவுகள் சந்தை முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இல்லாத போதிலும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.

புதிய முயற்சிகள்

புதிய முயற்சிகள்

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ரிஜிஸ்டர்ஸ், சர்வர்கள், செமி கண்டக்டர்ஸ் சாதனங்களின் வர்த்தகம் அதிகளவில் குறைந்ததால், ஐபிஎம் புதிய தொழில்நுட்பங்களான செக்குரிட்டி சாப்ட்வேர் மற்றும் கிளவுட் சர்விசஸ் துறையில் இறங்கியது.

முதலீட்டாளர்களின் நம்பிக்கை

முதலீட்டாளர்களின் நம்பிக்கை

ஐபிஎம் நிறுவனத்தின் மீதான வளர்ச்சியில் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்பிக்கை உள்ளதால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்றளவும் குறையவில்லை.

ஆயினும் கடந்த 12 மாதங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீத சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.

 

கிளவுட் சேவைகள்

கிளவுட் சேவைகள்

இந்நிறுவனத்தின் புதிய முயற்சிகளான கிளவுட் சேவைகளின் மூலம் கடந்த 12 மாதங்களில் 7.7 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டியுள்ளது.

வருவாய்

வருவாய்

கடந்த சில மாதங்களில் நாணய மதிப்பில் ஏற்பட்ட விலை மாற்றங்கள் இந்நிறுவனத்தின் வருவாய் அளவை 7 சதவீதம் வரை பதித்தது. ஐபிஎம் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே பெறப்படுகிறது.

மொத்த வருவாய்

மொத்த வருவாய்

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 2.33 பில்லியன் டாலராக இருந்ததாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 2.38 பில்லியன் டாலராக இருந்தது.

செலவீண குறைப்பு

செலவீண குறைப்பு

ஐபிஎம் நிறுவனத்தை லாபக்கரமாக மாற்ற இந்நிறுவனத்தின் தலைவர் கினி ரோமிட்டி பலக் கட்ட செலவீண குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதில் பணியாளர்களின் வெளியேற்றமும் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+