சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான Berkshire Hathaway-வின் தலைவர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட், தன்னிடம் இருக்கும் ஐபிஎம் பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்தார்.
இதனால் ஐபிஎம் நிறுவனம் ஆட்டம் கண்டுள்ளது.
ரூ.30,000 கோடி இழப்பு
இந்த ஒற்றை அறிவிப்பால் உலகளவில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஐபிஎம்-இன் பங்கு மதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது.
இதனால் ஐபிஎம் நிறுவனத்திற்கு 4.8 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 30,000 கோடி ரூபாய் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
சந்தை மதிப்பீடு
இந்தச் சரிவினால் ஐபிஎம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 144.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
வாரன் பபெட்
உலகின் டாப் 10 பணக்கார பட்டியலில் இருக்கும் வாரன் பபெட் ஐபிஎம் மீது நம்பிக்கை இழந்த காரணமாகத் தன்னிடம் இருக்கும் ஐபிஎம் பங்குகளை மூன்றில் ஒரு பங்கை விற்பனை செய்வதாக அறிவித்தார்.
Berkshire Hathaway
2016ஆம் ஆண்டு முடிவில் Berkshire Hathaway நிறுவனத்திடம் ஐபிஎம் நிறுவனத்தின் 81 மில்லியன் பங்குகளை வைத்திருந்தது இதன் மதிப்பு 13.5 பில்லியன். இந்நிறுவனத்தின் தலைவரான வாரன் பபெட் அறிவிப்பின் படி 27 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2011 முதல்...
வாரன் பபெட் தலைமையிலான Berkshire Hathaway Inc நிறுவனம் ஐபிஎம் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு முதல் முதலீடு செய்து தொடர்ந்து பங்கு இருப்பை அதிகரித்து வந்தது.
20 காலாண்டுகள்
பல்வேறு காரணங்களால் ஐபிஎம் நிறுவனம் உலகச் சந்தையில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து இழந்து வருகிறது. இதன் எதிரொலியாகக் கடந்த 20 காலாண்டுகளாக இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பெற்று வருகிறது.
இதனை மைய கருத்தாகக் கொண்ட வாரன் பபெட் தனது ஐபிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications