சர்வதேச அளவிலான தொழில்நுட்ப வர்த்தக நிறுவனமான ஐபிஎம் (International Business Machines Corp) குறிப்பிடப்படாத அளவு எண்ணிக்கையிலான வேலைகளை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது அமெரிக்காவில் குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்களில் இந்த பணி நீக்கமானது நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பற்றிய செய்திகள் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. புதிய தலைமை நிர்வாக அதிகாரியான அர்விந்த் கிருஷ்ணா பொறுப்பேற்ற பிறகு இந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நீண்டகால நலுனுக்காகவே இந்த முடிவு
மிகவும் போட்டி நிறைந்த சவாலான சந்தையில், எங்களது நிலையினை நிலையாக வைத்துக் கொள்ள, நாங்கள் உயர் மதிப்புடைய திறனுடையவர்களை எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆக ஐபிஎம்மின் இந்த தொழிலாளர்கள் சம்பந்தமான முடிவுகள் எங்கள் வணிக்கத்தின் நீண்டகால ஆரோக்கிய நலனுக்காகவே இருக்கின்றன, என்று அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எட் பார்பினி வியாழக்கிழமையன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கில் பாதிப்பு
இந்த வணிக முடிவால் சிலருக்கு கடிமான சூழ்நிலையை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆக ஐபிஎம் ஜூன் 2021 வரை பாதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்கா ஊழியர்களுக்கும் மானிய விலையில் மருத்துவ பாதுகாப்பு அளிக்கிறது. சில அறிக்கைகளின் படி இதின் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பரவலான வேலையிழப்பு
மேலும் இந்த வேலை வெட்டுகள் பெனிசில்வேனியா, கலிபோர்னியா, மிச்சூரி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பல மாநிலங்களில், பல ஊழியர்களையும் பாதித்துள்ளது என்று இதை அறிந்தவர் வட்டத்தில் கூறியதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக நிலவி வரும் மந்த நிலையால் தொழில்நுட்ப துறையில் பரவலான வேலை இழப்புகள் நிலவி வருகின்றன. ஆக அது ஐபிஎம்மிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.
செலவினைக் குறைக்க அதிரடியான நடவடிக்கை
இதில் ஐபிஎம் மட்டும் மல்ல ஏபிபின்ப் இன்க் மற்றும் உபெர் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள், அவர்களின் உலகளாவிய பணியாளர்களில் கால் பகுதியை குறைத்துள்ளன. இந்த நிலையில் ஐபிஎம் நிறுவனம் இந்த தொற்று நோயால் எத்தனை வேலையிழப்புகள் ஏற்படுகின்றன என்று தெளிவாக தெரியவில்லை. ஏற்கனவே இந்த நிறுவனம் வருவாய் வீழ்ச்சியால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் செலவுகளை குறைப்பது குறித்து இந்த நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications