எனக்கு வேலை குடுக்கல 10-வது மாடில இருந்து குதிச்சிருவேன்..! என்னம்மா இப்புடி பண்றீங்களேமா..?

குருகிராம்: சைபர் சிட்டியில், செக்டார் 18 பகுதியில் சில வாரங்களுக்கு முன், ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில் நடந்த சம்பவம் இது.

"போன மாசம் நீ என்னம்மா செஞ்சிருக்க. ஒரு நாள் கூட டார்கெட்ட ஒழுங்கா அச்சீவ் பண்ணல. உன்னால நம்ம மொத்த டீமுக்கும் கெட்ட பேர் தான். உன்னை எல்லாம் டீம்ல வெச்சிக்கிட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல... பேசாம வீட்டுக்கு போய், அம்மா அப்பா சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு" கடுப்படித்த கையோடு டீம் லீடர் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்.

பிரித்துப் பார்த்தால் Termination Letter...

கெஞ்சல்

கெஞ்சல்

"சார் ப்ளீஸ் சார், இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார். இந்த மாசம் எப்படியும் என்னோட டார்கெட் எல்லாம் அச்சீவ் பண்ணிடுவேன் சார்" கெஞ்சல் தொடர்கிறது. ஆனால் பயன் இல்லை.

தன்னுடிய Termination Letter-ஐ வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உலகமே இருண்டு விட்டது.

"சார் எனக்கு வேலை தருவீங்களா இல்லையா..?" மிரட்டுகிறாள் அந்தப் பெண்

"ஏம்மா டார்கெட் எல்லாம் அச்சீவ் பண்ணல, உனக்கு Termination Letter கொடுத்தாச்சு, அப்புறம் என்ன வேலை..? கெளம்புமா" பதில் கொடுத்துக் கொண்டே மேனேஜர் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

 

கடுப்பானவள் தன் நண்பர்களிடம்

கடுப்பானவள் தன் நண்பர்களிடம்

"என்ன இவங்க வேலைய விட்டு தூக்கிட்டாய்ங்க. எனக்கு என்னோட வேலையை இவங்க திருப்பிக் கொடுக்கணும். இல்லன்னா, 10-வது மாடில இருந்து குதிச்சுருவேன்" எனச் சொல்லிக் கொண்டே தன் Termination Letter உடன் மொட்டை மாடிக்குச் சென்று சுவரின் மேலும் ஏறி நின்றுவிட்டாள்.

மேலதிகாரிகள்

மேலதிகாரிகள்

அதைப் பார்த்த நண்பர்கள் பதறி அடித்துக் கொண்டு நிறுவன உயர் அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். பதறி அடித்துக் கொண்டு மொத்த அலுவலகமும் மாடிக்கு ஓடி இருக்கிறது.

"ஏம்மா வேலை செய்யலன்னு ஒன்னைய வேலைய விட்டு தூக்குனது தப்பா..? என்னம்மா இது கீழ இறங்கி வாம்மா" என மேனேஜர் கதறுகிறார். Termination Letter கொடுத்த HR டீம்-க்கு சப்த நாடியும் அடங்கிவிட்டதாம். ஒருவேளை இவள் தற்கொலை செய்து கொண்டால் A1 ஹெச் ஆர் தான் என பயத்தில் உறைந்து விட்டார்கள்.

 

போலீஸ் ஆஜர்

போலீஸ் ஆஜர்

இதற்கு மத்தியில் போலீஸுக்கு விவரம் தெரிந்து சம்பவ இடத்திற்கே வந்துவிட்டார்களாம். போலீஸுக்கு விஷயம் தெரிந்து விட்டதைப் பார்த்து Termination Letter கொடுத்த ஹெச் ஆர் டீமுக்கு இன்னும் பல்ஸ் குறைந்து விட்டதாம்.

"எம்மா என்னம்மா இது சின்ன புள்ள மாதிரி, வெளில உலகம் உனக்காக காத்திருக்கு, உனக்கு இந்த வேலை செட் ஆகல, வெளியே போய் இன்னும் நல்ல வேலையா பாத்து வாழ்கைல முன்னுக்கு வருவியா..? அத விட்டுட்டு பச்சப் புள்ள மாதிரி எனக்கு வேலை குடு இல்லன்னா குதிச்சிருவேன்னு மிரட்டிக்கிட்டு இருக்க" என என்னென்னமோ சமாதானம் சொல்லி இருக்கிறார்களாம்.

 

மீட்டிங் போட்ட இடம்

மீட்டிங் போட்ட இடம்

"எனக்கு என்னோட வேலையைக் குடுங்க. அப்ப தான் நான் கீழ இறங்கி வருவேன். இல்ல கீழ குதிச்சு மேல போயிடுவேன்"-ன்னு தான் பிடித்த முயலுக்கு காலே இல்லைன்னா சாதிச்சிருக்கா.

உடனே மொட்ட மாடியிலேயே ஹெச் ஆர் டீம் எல்லா மேலதிகாரிங்க கிட்ட பேசி, கொடுத்த Termination Letter-ஐ திரும்ப வாங்கிக்க சம்மதிச்சிருக்காங்க.

"எம்மா நீ சொன்ன மாதிரி உன் வேலைய உனக்கே திரும்ப தந்துடறோம். தயவு செஞ்சி கீழ வா தாயி" என டீம் லீடர் கதறி இருக்கிறார்.

 

முறையாக கடிதம் கொடு

முறையாக கடிதம் கொடு

"நான் வரமாட்டேன். என்னோட Termination Letter-ஐ திரும்ப வாங்கிக்கிறதா ஒரு லெட்டர் எழுதி முறையா எல்லாரும் கையெழுத்து போட்டுக் குடுங்க" என தெளிவாக மிரட்டி இருக்கிறாள்.

என்னய்யா இது விவரமான பொண்ணா இருக்கு. இந்த விவரத்தை வேலையில காட்டி இருந்தா, இப்ப இந்த Termination Letter-க்கு பதிலா இன்க்ரிமெண்ட் லெட்டர் கொடுத்த சம்பளத்த கூட்டி இருப்போம் என உயர் அதிகாரிகள் புலம்பி இருக்கிறார்கள்.

 

வேறு வழி

வேறு வழி

"சரிம்மா நீ சொன்ன மாதிரி ஒரு லெட்டர் ரெடி பண்ணித் தர்றோம், கொஞ்சம் வெயிட் பண்ணு" என நேரம் கேட்டு எல்லாவற்றையும் சரி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் படித்துப் பார்த்துவிட்டு "ஆல் ஓகே, இப்ப கீழ இறங்கி வர்றேன், என்னை பிடிச்சுக்க யாராவது வாங்க" என அழைத்திருக்கிறாள்.

அந்த பெண்ணை வேலையை விட்டு தூக்கிய டீம் லீடர் "வா தாயி, இப்ப தான் எனக்கு கல்யாணம் ஆகி இருக்கு, நீ செத்து என்ன சாவடிக்காம விட்டதுக்கே உன்னைய டீம்ல வெச்சுக்கலாம்" என கைத் தாங்களாக பிடித்து இறக்கி விட்டிருக்கிறார்.

 

புகார் வேண்டாமே

புகார் வேண்டாமே

போலீஸாரிடமும் "சார் ப்ளீஸ், கம்பெனி பேர் போயிடும், வேண்டாம்"-ன்னு கைய கால பிடிச்சு திருப்பி அனுப்பி இருக்காய்ங்க. இப்ப இந்த பொண்ணுக்கு, அலுவலகத்துல சாதாரணமா வேலை சொல்றதுக்கே பயப்படுறாய்ங்கன்னா பாத்துக்குங்க. இப்படி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி பறி போன தன் வேலையை அடுத்த சில மணி நேரங்களிலேயே பெற்று சாதனை படைத்திருக்கிறாள் அந்த வீர மங்கை.

இதே மாதிரி நாம பண்ணோம்னா "நல்ல வேலை, செத்துத் தொல, உங்க வீட்லயாவது நிம்மதிய இருப்பாய்ங்க"-ன்னு அவங்களே தள்ளி விட்டிருவாய்ங்களே..?

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+