கத்தார் அரசு இந்தியா உட்பட 80 நாடுகளுக்குக் கத்தார் செல்ல விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
இந்த முடிவால் விசா கட்டணம் ஏதும் இல்லாமல் முறையான பாஸ்போர்ட் உடன் 6 மாதம் வரை கத்தாரில் தங்க முடியும் மற்றும் திரும்பி செல்வதற்கான டிக்கெட் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
80 நாடுகள்
கத்தார் அரசு அதிகாரிகள் 80 நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் இனி விசா கேட்டு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் நேரடியாக விமான டிக்கெட் பெற்றுக்கொண்டு வரலாம் என்று அறிவித்துள்ளனர்.
பட்டியலில் உள்ள முக்கிய நாடுகள்
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, சீசெல்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பொன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குடியுரிமை பொருத்து இலவச நாட்கள் விசா
எந்த நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் இங்கு வருகின்றார்கள் என்பதைப் பொருத்து 180 நாட்கள், 90 நாட்கள், 30 நாட்கள் என இலவச விசா அளிக்கப்படும். மேலும் கூடுதலாக 30 நாட்கள் வரை நீட்டிப்பும் தேவைப்படும் போது விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
கத்தார் சுற்றுலா ஆணையம் அறிவிப்பு
கத்தார் சுற்றுலா ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டுத் தலைவரான ஹாசன் இப்ராஹிம் இந்தப் பட்டிலில் இடம்பெற்றுள்ள 80 நாட்டுக் குடிமக்கள் கத்தார் வந்த பிறகு இலவச விசாவினை உடனடியாகப் பெற முடியும். இதன் மூலம் உலகளவில் கத்தார் நாட்டின் புகழ்பெற்ற விருந்தோம்பல், பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களைக் கண்டறிவதற்குப் பார்வையாளர்களை அழைக்க எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் முதலீடு செய்ய விரும்புபவர்களையும் வர வேற்கின்றோம் என்று கூறியுள்ளார்.
இலவச டிரான்சிட் விசா
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கத்தார் அரசு இலவச டிரான்சிட் விசா ஒன்றை அறிமுகச் செய்தது. அந்த விசா பெற்றவர்கள் 5 மணி நேரம் முதல் 96 மணி நேரம் வரை கத்தார் முழுவதும் சுற்றி பார்க்க இயலும்.
கத்தார் ஏர்வேஸ்
இதே போன்று 2017 மே மாதம் முதல் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் டிரான்சிட் விசா பெற்றுப் பயணம் செய்பவர்களுக்கு 5 அல்லது 4 நட்சத்திர விடுதுகளில் இலவசமாகத் தங்கும் வசதியையும் ஏற்படுத்தித் தந்து வருகின்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications