சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவின் தாக்கம் என்பது 10,000 பேருக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரியளவில் கொரோனாவின் தாக்கம் என்பது முதன் முதலாக சீனாவில் தொடங்கியது. இது தொடர்ந்து பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
தற்போது மீண்டும் சீனாவிலேயே நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். இதன் காரணமாக சீன அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்த நிலையில் தளர்த்தப்பட்ட சில தினங்களிலேயே மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கம்
சீன மக்கள் மத்தியில் லாக்டவுன் தளர்வானது தற்போது தான் பெரும் ஆறுதலை கொடுத்த நிலையில், மீண்டும் இதுபோன்ற அறிவிப்புகள் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொடத் தொடங்கியுள்ள நிலையில், இதன் காரணமாக தற்போது மீண்டும் லாக்டவுன் நடவடிக்கைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் இன்று பல கடைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,
புதியதாக கொரோனா வழக்குகள்
நிபுணர்கள் ஏற்கனகே எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போராட்டங்கள் வெடித்த நிலையில் சீனா தளர்வுகளை அளித்தது. இதன் காரணமாக கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொருளாதாரத்தில் சரிவு
ஏற்கனவே லாக்டவுனுக்கு மத்தியில் தொழிற்துறையானது பெரும் சரிவினைக் கண்டிருந்த நிலையில், தற்போது மேற்கொண்டு சீனாவில் தொழில்துறை வளர்ச்சியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவின் தேவையிலும் சரிவினை ஏற்படுத்தலாம். மக்களின் நுகர்வும் சரிவடையலாம். வேலையின்மை விகிதம் அதிகரிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் பழைய படி மீண்டும் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்படலாம்.
உற்பத்தியில் பாதிப்பு
சீனாவில் நிலவி வரும் இந்த பதற்றமான நிலைக்கு மத்தியில், பல்வேறு நிறுவனங்களும் சீனாவுக்கு வெளியே தங்களது உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுக்கலாம். சீனாவில் அன்னிய முதலீடுகளானது பெரியளவில் சரிவினைக் காண வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இது ஒரு புறம் எனில் சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சிறுசிறு உணவகங்கள், மால்கள், சிறு சிறு கடைகள் என பலவும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023ன் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் என்பது 1.6% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இராண்டாவது காலாண்டில் 4.9% வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரிதும் தாக்கம் ஏற்படுத்தலாம்
சீனாவில் நிலவி வரும் இத்தகைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அண்டை நாடுகள், சுற்றுலா துறை என பலவும் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ஏற்றுமதி, இறக்குமதியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது சீனாவினையே பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
இந்தியாவினை பொறுத்தவரையில் மருத்துவ மூலதன பொருட்கள், எலட்ரானிக்ஸ் மூலதன பொருட்கள் என பலவும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே சிப் பற்றாக்குறையால், இந்தியாவின் வாகன உற்பத்தியானது பெரியளவில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ள நிலையில்ல் இனியும் இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications