வாஷிங்டன்: தற்போதுள்ள உலகப் பொருளாதார நிலையில், ஆசிய கண்டத்திலேயே இந்தியாவிற்குத் தான் குறுகியகால வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் பிரகாசமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் குறுகிய கால வளர்ச்சியில் மிகவும் சாதகமான நிலை உள்ளதாம்.
தடைகள்
இந்தியாவில் பொருளாதார வளச்சிக்கான தடைகள், பெருமளவு குறைந்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிலையான அரசியல் அமைப்பு, வர்த்தகத்திற்கான உறுதி தன்மை, பிற ஆபத்துக்கள், குறைவான விலை நிலை ஆகியவை நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி உள்ளது.
வளர்ச்சி விகிதம்
2014-15ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது.
வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் சிறப்பாக உள்ளதாலும், தடைகள் குறைந்ததாலும் நாட்டின் வளர்ச்சி 2015-16ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள்
கடந்த சில மாதங்களில் மத்திய அரசு அறிவித்த திட்டங்களின் மூலம் இந்தியாவில் முதலீடு, உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி மற்றும் இறக்கமதி ஆகியவை அதிகரித்துள்ளதாக ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய சில துறைகள்
ஆனால் மத்திய அரசு எனர்ஜி, சுரங்கம், மற்றும் எரிசக்தி துறைகள் கண்டுகொள்ளவில்லை எனவும் ஐஎம்எப் கூறுகிறது.
நாட்டில் பல சோலார் மின்சார உற்பத்தி திட்டங்கள் நிறுவனப்பட்டாலும், மத்திய அரசின் வளர்ச்சி கணிப்புகளான 8.5 சதவீதத்திற்கு இத்திட்டங்கள் ஈடுகொடுக்காது.
வர்த்தகப் பருவ நிலை மேன்மை அடைந்தது...
இத்தியாவில் புதிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் துவங்குவதற்கும், பழைய நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கும் ஏற்றவாறு நிறுவனங்களுக்கு நிலங்களை அளிப்பது, சுற்றுச்சூழலை அமைப்பது, பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் பணிகள் ஆகிய அனைத்தும் மேன்மை அடைந்துள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
பிரகாசமான இந்தியா
ஒட்டுமொத்தமாகச் சர்வதேச சந்தையில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் பிரகாசமாக உள்ளது. வல்லரசு நாடுகள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications