உலகில் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான சவுதி ஆர்ம்கோ நிறுவனம் அடுத்த வரும் பங்குச்சந்தையில் இறங்க உள்ளது, இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் நட்புறவும் சவுதி ஆர்ம்கோ உடன் மேம்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தர்மேந்திர பிரதான்
ஆர்ம்கோ நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் சவுதியில் இந்தியா நிறுவனங்கள் தனிப்பட்ட நிறுவனத்தை உருவாக்க வாய்ப்புகள் உருவாகும் என எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
கூட்டணி
இதுகுறித்து இந்நாட்டு என்ரஜி துறை அமைச்சரான காலித் அல் பலித் கூட்டணி மூலம் நிறுவனத்தை அமைக்க வரவேற்பு அளித்துள்ளதார். இதன் மூலம் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.
3 நிறுவனங்கள்
இந்நிலையில் 3 இந்திய நிறுவனங்கள் ஆர்ம்கோ நிறுவனத்துடனான கூட்டணியில் வருடத்திற்குச் சுமார் 60 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
5 சதவீத பங்குகள்
அடுத்த வருடம் ஆர்ம்கோ நிறுவனம் தனது 5 சதவீத பங்குகளைப் பல்வேறு சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான முதலீட்டை ஆர்ம்கோ பெறும்.
இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 2 டிரில்லியன் டாலர்.
இறக்குமதி
இந்திய தனது கச்சா எண்ணெய் தேவையைச் சுமார் 86 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்திச் செய்கிறது.


Click it and Unblock the Notifications