உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடுகள் பட்டியலில் இருந்து இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியதற்கான காரணங்கள்.
உலக வரலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடுகள் பட்டியலில் இருந்து இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தை இந்தியா பிடித்தது.
முதல் ஐந்து இடத்தில் உள்ள நாடுகள்
இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியா ஆறாம் இடம் பிடித்ததற்கான காரணங்கள்
இந்த மிகப்பெரிய மைல்கல்லை இந்தியா அடைய விரைவான பொருளாதார வளர்ச்சியும், இங்கிலாந்திற்கு பிரிக்ஸிட் முடிவால் ஏற்பட்ட சரிவுமே காரணம் என்று கூறப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் கனிப்பு
சென்ற அக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் 2017-ம் ஆண்டு இந்தியா 7.6 சதவீதம் வரை வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று கணித்துள்ளது.
மோடி
இந்திய பிரதமராக மோடி 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதை அடுத்து துங்கிக் கொண்டு இருந்த இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ரூபாய் நோட்டு மாற்றம்
இந்தியாவில் 86 சதவீதம் பயன்பாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி இதன் மூலம் கருப்பு பணம் வெளிவரும் என்று கூறினார்.
வரி செலுத்துனர்கள் அதிகமாகும் என்று எதிர்பார்ப்பு
இதனைத் தொடர்ந்து உலகின் இரண்டாம் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே மக்கள் வரி செலுத்தி வருவது மாற்றம் அடைந்து இன்னும் அதிகமான அளவில் வரி வசூலிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications