இந்தியா ரஷ்யா இடையேயான நட்புறவு என்பது பற்பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு இருந்தாலும், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு இன்னும் அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக வணிக ரீதியான நடவடிக்கை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம்.
Recommended Video
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு இடையே இப்பிரச்சனைகளுக்கு எப்படியேனும் முற்றுப்புள்ளி வைத்து விட மாட்டோமா? என மேற்கத்திய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக முடக்கினாலே, பின்வாங்கி விடும் என மேற்கத்திய நாடுகள் நம்பின. இதனால் ஏராளமான தடைகளை ரஷ்யா மீது விதித்தன.

ஆனால் ரஷ்யாவோ எதற்கும் பிடி கொடுக்காது தொடர்ந்து வலுவாக தாக்குதலை நடத்தி வருகின்றது.
இத்தகைய சூழலில் தான் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் முக்கிய வணிகமாக எண்ணெய் வணிகத்திலேயே கைவைத்தது. ஆனால் இதற்கெல்லாம் தளராது ரஷ்யாவோ சலுகை விலையில் எண்ணெய் விற்பனை செய்து வருகின்றது.
இதனை குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டுமே கொடுத்து வருகின்றது. இந்தியாவினை பொறுத்தவரையில் பெரும்பகுதி தேவையை இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்து வரும் சூழலில், ரஷ்யாவின் சலுகை என்பது பெரும் பயனளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த சூழலில் பல்வேறு வணிகங்களுக்கும் இந்தியாவும் ரஷ்யாவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இது மேற்கோண்டு பயன் அளிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இப்படி ஒரு சூழலில் இந்தியாவும் ரஷ்யாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து, ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் தெரிவித்துள்ளார்.
இது இரு நாடுகளின் வணிக வளர்ச்சியினையும் ஊக்குவிக்க பயன்படும் எனலாம். வரலாற்று ரீதியாக பார்க்கும்போது ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி என்பது தொடர்ந்து ஏற்றுமதியினை காட்டிலும் குறைவாகவே இருந்து வருகின்றது.
கடந்த 2017 - 18ல் 4.1 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் இது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் 2022 - 23ல் ஜனவரி வரையில் ஏற்றுமதியை விட இறக்குமதி 15 மடங்கு அதிகரித்துள்ளது.
இதே ரஷ்யாவின் முதலீடு இந்தியாவில் கடந்த 2017ல் 18 பில்லியன் டாலராக இருந்தது. இதே இந்தியாவின் முதலீடு ரஷ்யாவில் 13 பில்லியன் டாலராகவும் உள்ளது. ஒட்டுமொத்த முதலீடும் 2025ல் 30 பில்லியன் டாலராக இலக்கு வைக்கப்பட்டது. இந்த இலக்கை ஏற்கனவே எட்டி விட்ட நிலையில், இன்னும் 2025-க்குள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான ஒரு நிலையில் இலவச வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், இது இந்தியா ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தலாம். எனினும் இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் எந்த மாதிரியான எதிரொலிப்பை காணுமோ? என்ற கவலையையும் ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications