டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறார். அப்படி அவர் கொண்டு வந்திருக்கும் ஒரு வரி முறைதான் ரெசிபுராக்கல் வரி முறை. ரெசிப்புராக்கல் வரி முறை என்பது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். இப்படி இருக்கையில் அமெரிக்க குடும்பங்களில் வரிவிதிப்பு தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்த கருத்தை இந்திய அமெரிக்க எழுத்தாளரான ராமித் சேதி தனது X பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
எழுத்தாளரும் நிதி ஆலோசகரமான ராமித் சேதி அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து தனது X பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவருடைய பதிவு விரைவில் பிரபலம் அடையத் தொடங்கியது.

"ஐ வில் டீச் யூ டு பீ ரிச்" என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியர் தான் ராமித் சேதி. இவர் அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள வரிகளால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வரிச் சலுகைகளால் அமெரிக்காவில் வசிக்கும் பணக்காரர்கள் பயனடைந்தாலும் உழைக்கும் வர்க்கத்தினர் பலர் விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
20% முதல் 45 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியால் வீட்டில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும். டவல்கள், காபி மேக்கர்கள், கடற்பாசிகள், பவர் டூல்கள் போன்ற பொருட்கள் பெரும்பாலானவை சீனா, மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தான் அமெரிக்காவுக்கு இருக்குமதி செய்யப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பொருட்கள் அனைத்தும் தற்போதைய வரி முறையின் காரணமாக கடுமையாக விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விலை உயர்வுகள் ஒரு சராசரி அமெரிக்க குடும்பத்தின் செலவுகளை அதிகரிக்கும் என்றும், "34 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை வரிகளை அனுபவியுங்கள்" என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.
ராமித் சேதியின் முக்கிய கருத்தே, இது போன்ற விலை உயர்வு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை பாதிக்கும் என்பதுதான். அதே சமயம் வரி குறைப்புகள் மூலம் உயர் வருமானம் பெறும் தனிநபர்கள் பயனடைவார்கள்.
ராமித்தின் பதிவு விரைவில் பிரபலமடைந்தது. பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். ஒரு பயனர் யாராவது இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்குபவர்கள் வரியை ஈடுகட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications