அமேசானின் ஜெப் பீசோஸ், பெர்ஷைர் ஹேத்தவே-இன் வாரன் பபெட் மற்றும் ஜேபி மோர்கன் சேஸின் ஜேமி டிமான் ஆகிய 3 உலகின் முன்னணி நிறுவனங்கள் இணைந்து புதிதாகத் துவங்க உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவராக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடல் மற்றும் சுகாதாரம்
இந்த 3 நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் உடல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும், குறைந்த செலவில் நிறைவான சேவையை அளிக்க உதவும் வகையில் திட்டமிட ஒரு புதிய நிறுவனத்தை இந்த 3 நிறுவன தலைவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
அதுல் கவான்டே
ஜூலை 9ஆம் தேதி பாஸ்டன் பகுதியை தலைமையிடாமாகக் கொண்டு துவங்க இருக்கும் இந்நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக அதுல் கவான்டே பணியாற்ற உள்ளார்.
அறுவை சிகிச்சை நிபுணர்
அதுல் கவான்டே அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அமெரிக்க ஹெல்த்கேர் குறித்துப் பலமுறை பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அமெரிக்க ஹெல்த்கேர்
இவர் அமெரிக்க ஹெல்கேர் முறை செலவுகளை அதிகரிக்கும் வழியிலேயே உள்ளது, அதைக் கட்டுப்படுத்துவதில் எவ்விதமான பணிகளும் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய நிறுவனம்
இப்புதிய நிறுவனத்தின் மூலம் அமேசான், பெர்ஷைர் ஹேத்தவே மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் ஆகிய நிறுவன ஊழியர்களுக்குக் குறைந்த செலவில் நிறைவான சேவையை அளிப்பதை முதற்கட்ட பணியாக அதுல் கவான்டே தலைமையில் துவங்க உள்ளது.
அதன் பின்னர் இந்நிறுவனம் உருவாக்கப்படும் சிறப்பான மாடலை பிற நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் இந்நிறுவனம் தனது பணியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications