இந்திய மாணவர்களுக்காக களம் இறங்கிய இந்தியா..! கடுப்பாகும் அமெரிக்கா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில், தங்களுக்கே தெரியாமல் ஒரு போலி பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டபப்டிப்புகளுக்காக பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்த அமெரிக்காவின் அராஜக செயலௌக்கு பலமான கண்டனம் தெரிவித்திருக்கிறது இந்தியா.

 

இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் தாங்கள் அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தை மீறித் தான் இந்தக் கல்லூரிகளில் பதிவு செய்ததாக அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறதாம். இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சுஷ்மா சுவராஜ்ஜின் வெளிநாட்டு விவகாரத் துறை

சுஷ்மா சுவராஜ்ஜின் வெளிநாட்டு விவகாரத் துறை

இந்திய அரசோ அமெரிக்காவின் கணிப்புகளை முற்றிலும் மறுத்திருக்கிறது. இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்களே ஒழிய, பலவந்தமாக போலி பல்கலைக்கழகத்தில் சேர இந்தியாவில் இருந்து வரவில்லை என நெத்தியில் அடித்திருக்கிறது. அதோடு இந்திய மாணவர்கள் குறித்த அனைத்து தகவல்களை, டெல்லியில் இயங்கும் அமெரிக்க தூதரகத்திடம் இந்திய அரசு முறையாக கேட்டிருக்கிறதாம். அதோடு கைது செய்யப்பட்ட மாணவர்களை, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் பார்க்கவும் அனுமதி வழங்கச் சொல்லி கேட்டிருக்கிறார்களாம்.

பல்கலைக்கழகத்தின் மீது

பல்கலைக்கழகத்தின் மீது

மிஷிகன் நகரத்தில் இருந்து இயங்கும் ஃபர்மிங்டன் பல்கலைக்கழகத்தின் மீது இந்திய மாணவர்களை ஏமாற்றியதற்காக நடவடிக்கை தேவை எனவும் இந்திய அரசு அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறதாம். மிக முக்கியமாக இந்திய மாணவர்களின் விருப்பமின்றி அவர்களை அமெரிக்காவில் இருந்து விரட்டக் கூடாது எனவும் அமெரிக்க அரசுக்கு இந்தியா வலியுறுத்தி இருக்கிறதாம்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்திய அரசு மேலே சொன்ன கோரிக்கைகள் வைத்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.

ஹாட்லைன்
 

ஹாட்லைன்

அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேச வாஷிங்டனில் சிறப்பு தொலைப்பேசி உதவி அழைப்பு எண் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்களாம்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்திய அரசு மேலே சொன்ன கோரிக்கைகள் வைத்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

அமெரிக்க அதிகாரிகளால் இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இது முதல்முறையல்ல. 2016ஆம் ஆண்டு குடியுரிமை அதிகாரிகளால் போலியாக அமைக்கப்பட்ட நியூ ஜெர்சி பல்கலைக்கழகம் மூலம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் கூடவா..?

அமெரிக்காவில் கூடவா..?

இளநிலைப்படிப்புக்கு 8,500 அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்றும், முதுநிலை மாணவர்களுக்கு 11,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்கான ஃபேஸ்புக் பக்கமும், அதில் காலண்டர் நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களாக குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் தான் இர்நுதிருக்கிறார்கள் எனவும் கடந்த வாரம் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

எல்லாம் சலுகைக்காகத் தானாம்.

எல்லாம் சலுகைக்காகத் தானாம்.

மாணவர்கள் தங்கள் மாணவ விசாக்களை தக்க வைத்துக் கொள்ள போலியாக கல்லூரியில் பதிவு செய்வதே இந்த `பே டூ ஸ்கீம்` ஆகும். அப்படி இந்த திட்டத்தி கீழ் சேர்ந்து தங்கள் சலுகைகளை தக்க வைத்துக் கொள்ளவே இந்த ஒன்னுக்கும் உதவாத மிஷிகன் பல்கலைக்கழக்த்தில் சேர்ந்தார்கள் இது இந்திய மாணவர்கள் தெரிந்தே செய்தது தான் என அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் வாதிட்டிருக்கிறார்கள். இதில் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்தியர்கள் மீதான வெறுப்பு ஐடி விசாவில் இருந்து இப்போது மாணவர்கள் விசாவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கர்களுக்கு இந்தியர்கள் மீது மட்டும் ஏன் இத்தனை கடுப்போ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian government is pushing hard to rescue Indian students

MEA of indian government is pushing hard to rescue indian students and request american embassy to give further details about indian students and arranged for a hotline to communcate with their parents
Story first published: Sunday, February 3, 2019, 12:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X