ஜூரிச்: கருப்புப் பணத்தை மறைத்து வைக்கச் சிறந்த இடமாகக் கருதப்படும் சுவிஸ் வங்கிகளுக்கு இந்திய அரசு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தும் வருகிறது. இதனைச் சுதாரித்துக்கொண்ட இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் தங்களது இருப்பை 33 சதவீதம் வரை குறைத்துள்ளனர்.
இதனால் சுவிஸ் வங்கியில் வரலாறு காணாத வகையில் இந்தியர்களின் பணத்தின் இருப்பு 1.2 பில்லியன் பிராங் அதாவது வெறும் 8,392 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது எனச் சுவிஸ் வங்கி அமைப்புகள் தெரிவித்துள்ளது.
33 சதவீதம் சரிவு
இந்தியா உட்படப் பல நாடுகள் OECD அமைப்புடன் இணைந்து கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகச் சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்திற்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்களது இருப்பு அளவுகளின் முழுமையான பட்டியலை கோரி வருகிறது. ஆனால் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சுவிஸ் வங்கிகள்.
இந்நிலையில் பல முறை சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் இருப்பு பற்றிச் சில தகவல்களைக் கசிந்த வண்ணம் உள்ளது. இதனை வைத்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்தியர்கள் உஷார்
இப்பிரிச்சனையின் விளைவுகளைச் சுதாரித்துக்கொண்ட இந்தியர்கள் தொடர்ந்து சுவிஸ் வங்கியில் இருக்கும் தங்களது இருப்பைக் குறைத்து வருகின்றனர்.
2015ஆம் ஆண்டு முடிவில் சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் சுமார் 33 சதவீதம் குறைந்து தற்போது வெறும் 8,392 கோடி ரூபாயாக உள்ளது எனச் சுவிஸ் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் நேஷனல் வங்கி
2015ஆம் ஆண்டு முடிவில் சுவிஸ் வங்கிகளின் இந்தியர்களின் இருப்பு அளவு CHF 596.42 மில்லியன் குறைந்து மொத்த இருப்பு அளவு CHF 1,217.6 மில்லியனாகக் குறைந்துள்ளது என வியாழக்கிழமை சுவிஸ் நேஷனல் வங்கி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத சரிவு..
இதனால் சுவிஸ் வங்கிகள் வரலாறு காணாத வகையில் சுவிஸ் வங்கிகளில் தங்களது இருப்பு அளவைக் குறைத்துள்ளனர் என்று சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியர்களின் இருப்பு அளவு தொடர்ந்து 2வது வருடமாகச் சரிந்து வருவதாகவும் SNB வங்கி கூறியுள்ளது.
ஆல்பைன் நாடுகள் தங்களது வங்கி இருப்பு அளவுகளைக் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
2006இல்...
சுவிஸ் நேஷனல் வங்கி அறிவிப்புகளின் படி 2006ஆம் ஆண்டில் இந்தியர்களின் இருப்பு அளவு 23,000 கோடி ரூபாயாக இருந்தது. 2006ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இருப்பு அளவு குறைந்து வந்தாலும் 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இருப்பு அளவு 12% மற்றும் 42% சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications