சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட தலைமை செயல் அதிகாரி மீது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Deeptanshu 'Deep' Prasad என அறியப்படும் பிரசாத் என்பவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் Quantum Generative Materials என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை வேளையில் இந்த தாக்குதல் நடந்ததாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு முறை தன் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் "நேற்று இரவு அதிகாலை மூன்று முப்பதிலிருந்து நான்கு மணிக்குள் இருக்கும். நான் சான் பிரான்சிஸ்கோவில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகே கடற்கரையிலிருந்து ஹோட்டலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத சிலர் என்னை துரத்தி வந்தனர். வந்து என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்" என தெரிவித்திருக்கிறார்.
முதலில் ஒரு முறை அவரை துப்பாக்கியால் சுட்ட நபர்கள் மீண்டும் துரத்தி வந்து இரண்டாவது முறையாக துப்பாக்கியால் சுட்டனர் என அவர் கூறியுள்ளார். முதல் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து தான் ஓடியதாகவும் ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அப்போது இரண்டாவதாக தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அவர்கள் துப்பாக்கி வைத்திருந்தனர் நானும் ஹோட்டல் ஊழியரும் இதனை பார்த்தோம் என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வை நினைத்தால் இன்னமும் என் உடல் எல்லாம் நடுங்குகிறது என பிரசாத் பதிவு செய்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக நான் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையிடம் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் அதனை விசாரிக்காமலேயே விட்டுவிட்டனர் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
என்னை தாக்கியவர்கள் துப்பாக்கியை கையில் வைத்திருந்ததை நானும் அந்த ஹோட்டல் ஊழியரும் பார்த்தோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தை நினைத்தால் இன்னும் கூட எனக்கு உடல் நடுங்குகிறது ஆனால் காவல்துறையோ எந்த வித விசாரணையும் நடத்தாமல் இது சாதாரண ஒரு பட்டாசு வெடிப்பு நிகழ்வு என கூறி வழக்கை முடித்து வைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும் அவர் சாடியுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் 30 ஆண்டுகளில் இப்படி மோசமான அனுபவம் எனக்கு கிடைத்தது இல்லை என கூறும் அவர் ஆபத்தான நகரமாக சான் பிரான்சிஸ்கோ மாறி விட்டது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications