இந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"அமெரிக்கா பொய்ட்டா வாழ்கையே மாறிடும்" இது தான் பல இந்தியர்களின் கனவு. நேர் வழிகளில் முயற்சித்துவிட்டோம். முடியவில்லை. இனி குறுக்கு வழி தான். திருட்டுத் தனமாக அமெரிக்க செல்ல வேண்டும். எவ்வளவு ஆகும். ஒரு 50 லட்சம் ரூபாய். சரி இன்னும் ஒரு வாரத்தில் பணத்துடன் வருகிறோம். இது தான் அமெரிக்காவில் கைதாகி அல்லாடும் பல இந்தியர்கள் இந்தியாவில் இருந்து திருட்டுத் தனமாக அமெரிக்காவுக்கு பயணப்படும் முன் இருக்கும் நிலை.

 

கைதிகளாக இந்தியர்கள்

கைதிகளாக இந்தியர்கள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயற்சித்தவர்கள் என சுமார் 2,400 இந்தியர்களை அமெரிக்க சிறையில் அடைத்து வைத்து இருக்கிறார்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள். NAPA மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, அக்டோபர் 10, 2018 கணக்குப் படி தற்போது அமெரிக்காவில் உள்ள 86 சிறைச் சாலைகளில் 2,383 இந்தியர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சிறையில் எவ்வளவு பேர்

எந்த சிறையில் எவ்வளவு பேர்

California's Adelanto Immigration & California's Adelanto Immigration-ல் 377 இந்தியர்கள், Imperial Regional Adult Detention Facility-ல் 269 இந்தியர்கள், Federal Correctional Institution Victorville-ல் 245 இந்தியர்கள், 115 at Washington State's Tacoma ICE Processing Center-ல் 115 இந்தியர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது அமெரிக்க அரசு.

வேண்டுகோள்
 

வேண்டுகோள்

வட அமெரிக்க பஞ்சாபியர்கள் சங்கத்தின் (NAPA) தலைவர் சத்னம் எஸ் சஹால் "ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள் தான். இந்த விஷயத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

எப்படி நுழைகிறார்கள்

எப்படி நுழைகிறார்கள்

இந்தியர்கள் எப்படி அமெரிக்காவில் நுழைய முடிகிறது என்று கேட்டதற்கு "குடும்ப சூழ்நிலை காரணமாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் சொந்த நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஊரில் மதிப்பு மரியாதை இழந்தவர்கள் போன்றவர்கள் தான் இப்படி திருட்டுத் தனமான அமெரிக்காவுக்கு குடியேற அதிக அளவில் முயற்சித்து மாட்டிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு சில இந்திய மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் உதவி செய்கின்றன. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஒவ்வொரு நபரிடமும் ரூபாய் 35-50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அந்த தொகையில் இவர்களை மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய வைக்கிறார்கள்" என்றார் சத்னம்.

பிரச்னை

பிரச்னை

இப்படி சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயற்சி செய்பவர்கள், பல சமயங்களில் அமெரிக்க அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ஆதன் விளைவாக, சிக்கியவர்களை சிறையில் அடைக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்கா வந்து சேர செய்த 35 - 50 லட்சம் ரூபாய்க்கான செலவுகளையும் பெரும்பாலும் கடன் வாங்கித் தான் கொடுக்கிறார்கள். ஆகையால் வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுக்க முடியாமல், அமெரிக்காவில் கெளரவமாகவும் வாழ முடியாமல் மிகவும் மனம் உடைந்து வாழ்கையை வெறுத்துவிடுகிறார்கள்.

கெஞ்சும் இந்தியர்கள்

கெஞ்சும் இந்தியர்கள்

இந்த 2382 கைதிகளில் பெரும்பாலானவர்கள் "எங்களுக்கு இந்தியாவில் வன்முறையும், அடக்குமுறைகளும் தான் காத்திருக்கின்றன. அதனால் எங்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம். எங்களுக்கு இந்தியா வேண்டாம்... எங்களை அமெரிக்க காப்பகங்களிலேயே வைத்துக் கொள்ளுங்கள்" என அரசை மன்றாடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமெரிக்காவை கண்மூடித் தனமாக விரும்பும் இந்தியக் கைதிகள்.

ட்ரம்பு நடவடிக்கை

ட்ரம்பு நடவடிக்கை

சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி தேவையான நடவடிக்கைகள் எடுக்க குடியுரிமை அதிகாரிகளுக்கு ட்ரம்பு உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவுக்கு அமெரிக்க அதிகாரிகள் வட்டாரத்திலும் நல்ல வரவேற்பு இருக்கிறதாம். ஏற்கனவே இவர் செய்த குடியுரிமை சீர் திருத்தங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகளை நாம் இன்னும் மறக்கவில்லை தானே. இனி இந்த 2400 இந்தியர்களை என்ன செய்ய இருக்கிறாரோ அந்த கட்டமைக்கப்பட்ட கடவுளுக்குத் தான் வெளிச்சம் என்கிறார்கள் ட்ரம்பு விமர்சகர்கள். இங்கு இவ்வளவு பிரச்னை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட நம் மோடிஜி எந்த சிலையை திறந்து வைக்கச் சென்று இருக்கிறார் எனத் தெரியவில்லை.

மோடியின் மெளனத்துக்கும்... ட்ரம்பின் கோவத்துக்கும்... பலியாவது என்னவோ... அப்பாவி 2382 இந்தியர்கள் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: indian mexico modi மோடி
English summary

indian prisoners requesting american government to keep them in american asylum

indian prisoners requesting american government to keep them in american asylum
Story first published: Friday, November 16, 2018, 8:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X