சாரி இந்தியன்ஸ்! உங்க கணவன் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை கிடையாது...பிரியங்களுடன் டிரம்ப்..!

இனி H4 ரக விசாதாரர்கள், அமெரிக்காவில் வேலை செய்யத் தடை இது தான் செய்தி. இதை எதுக்கு ட்ரம்பு அரசாங்கம் பெரிய வேலையாக எடுத்துச் செய்கிறது என்று ஆழ்ந்து பார்த்தால் "வெளிய போங்கடா இந்தியானுங்களா" என்கிற வெறுப்பு தான் தெரிகிறது.

H4 விசா

H4 விசா

H1-B visa வில் அமெரிக்காவில் வேலை பார்த்து வாழும் இந்தியர்களின் மனைவி அல்லது கணவன்மார்கள் தங்கள் குடும்பத்தோடு வாழ, அமெரிக்க அரசால் H4 விசா வழங்கப்பட்டு வந்தது. இது கணவன் மனைவி தவிர நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

வேலைக்குத் தடை

வேலைக்குத் தடை

இதனால் அமெரிக்காவில் H1-B visa எடுத்து வேலை பார்க்கும் ஏகப்பட்ட இந்தியர்களின் மனைவிமார்கள் மற்றும் கணவன் மார்கள் இந்த H4 ரக விசாக்களை பயன்படுத்தி அமெரிக்காவில் குடியேறினர். இன்னும் கூட குடியேறி வருகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் செலவுகளை ஒருவர் சம்பாத்தியத்தில் கட்டுப்படுத்தி வாழ்வது எல்லாம் சிரமம். அதனால் பொதுவாக H1-B visaக்கு H4 விசா எடுத்துச் செல்லும் குடும்பத்தினர் அமெரிக்காவிலேயே ஏதாவது ஒரு பகுதி நேர அல்லது முழு நேர வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார்கள்.

நுகர்வுச் கலாச்சாரம்

நுகர்வுச் கலாச்சாரம்

இன்று இந்தியர்கள் பலரும் சினிமா பார்க்கும் போது நிச்சயம் பாப் கார்ன் சாப்பிட்டே ஆக வேண்டும், குளிர்பானங்களை விட தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் (ஆம் அமெரிக்காவில் குளிர்பானத்தை விட தண்ணீரின் விலை அதிகம்), என்று உலகுக்கு செலவழித்தலை ஒரு கலை போல கற்றுக் கொடுத்து, நுகர்வுச் கலாச்சாரத்தின் தலைநகராகத் திகழும் அமெரிக்காவில் எப்படி செலவுகளை கட்டுப்படுத்த முடியும். ஆக அமெரிக்காவில் வாழ அதிக பணம் தேவை. அது இல்லை என்றால் நிச்சயம் திரும்பித் தானே ஆக வேண்டும். குறைந்தபட்சம் அமெரிக்காவில் இந்த H4 விசாக்களின் எண்ணிக்கையாவது குறையுமே... என்பது உத்தமர் ட்ரம்பின் கணக்கு.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

ஆக திட்டம் இட்ட படி அதில் தான் கை வைத்திருக்கிறார்கள். தற்போது H4 விசா எடுத்து அமெரிக்காவில் வசிப்பவர்கள், வேலை பார்த்து வாழ்பவர்கள், இனி அமெரிக்காவில் வேலை பார்க்கத் தடை விதிக்கத் தான் இந்த ட்ரம்பு அரசாங்கம் விரைந்து செயல்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்த சட்டம் வரக் கூடும் என அமெரிக்க பத்திரிகைகள் சொல்கின்றன.

எதிர் சட்டம்

எதிர் சட்டம்

Anna G Eshoo and Zoe Lofgren என்கிற இரு வர் தான் இப்போது அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஆதரவாக H-4 Employment Protection Act என்கிற H4 விசாதாரர்களின் பணிக்கான பாதுகாப்பு சட்டத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது கிட்ட தட்ட ட்ரம்பு கொண்டு வர இருக்கும் சட்டத்துக்கு எதிரான சட்டம் தானாம்.

 அமெரிக்கர்கள் கருத்து

அமெரிக்கர்கள் கருத்து

"டிரம்பின் தடை சட்டம் அமலுக்கு வந்தால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்கள் பிரச்னைக்கு உள் ஆவார்கள். அத்தனை பேரிடமும் வேலை பார்ப்பதற்கான உரிமத்தைக் கேட்டு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் Form I-766 நோட்டீஸ் அனுப்புவார்கள். H4 விசா எடுத்து வேலை பார்க்கும் நபர்களின் சம்பளமும் அவர்கள் குடும்பத்துக்கு அவசியமாவதை நாங்கள் உணர்கிறோம்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கருத்து

கார்ப்பரேட் கருத்து

"இந்தியர்கள் இன்று டெக்னாலஜி செய்யுன் சாதனைகளை மறுப்பதற்கில்லை. அவர்களை அரவணைத்து அமெரிக்க கார்ப்பரேட்கள் ஒரு நல்ல உறவை மேம்படுத்தி வருகிறது. தற்போது அவர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நிறுவனங்களுக்கு செல்லும் வாய்ப்பை அமெரிக்க அரசே ஏற்படுத்திக் கொடுப்பது போல இருக்கிறது. இந்தியர்கள் அப்படியே அமெரிக்காவுக்கு எதிரான நிறுவனங்களில் சேர்ந்தால் பெரிய இழப்பு அமெரிக்க கார்ப்பரேட் துறைக்கு காத்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்" என சில கார்ப்பரேட் அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மோடிஜிய பாத்தா மட்டும் நல்லாத் தான் பேசுறீங்க... ஆனா இந்தியனுங்கள விரட்டுறதுல மட்டும் குறியா இருக்கீங்களே ட்ரம்பு.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+