அமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்க காத்திருப்பவர்களில் பட்டியலில் 75% இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக வழங்கப்படும் க்ரீன் கார்டு முறைக்கு விண்ணப்பிப்பதில் 4-ல் மூவர் இந்தியர்கள் என்று அன்மையில் வெளியான தரவுகள் கூறுகின்றன.

 

2018-மே மாதம் வரையிலான கணக்கு விவரங்களின் படி அமெரிக்காவில் க்ரீன் கார்டு வேண்டும் என்று 3,95,025 நபர்கள் விண்னப்பித்துள்ளனர்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

அமெரிக்காவில் க்ரீன் கார்டு வேண்டும் என்று விண்ணப்பித்த இந்தியர்கள் எண்ணிக்கை 3,06,601 நபர்கள் ஆவர். இந்தத் தகவல் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சீனா

சீனா

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா செல்லும் சீனர்களில் தற்போது 67,031 நபர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இந்தியா மற்றும் சீனாவை தவிற பிற எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் 10,000-க்கு அதிகமாக அமெரிக்காவில் க்ரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கவில்லை. எல் சால்வடார் (7252), குவாத்தமாலா (6,027), ஹோண்டுராஸ் (5,402), பிலிப்பைன்ஸ் (1,491), மெக்சிகோ (700) மற்றும் வியட்நாம் (521).

கட்டுப்பாடு
 

கட்டுப்பாடு

அமெரிக்காவில் தற்போது உள்ள விதிமுறைகளின் படி ஒரு நிதி ஆண்டில் ஒரு நாட்டில் இருந்து 7 சதவீதத்தினருக்கு அதிகமாக க்ரீன் கார்டுகளுகான அனுமதிகள் வழங்கப்படக் கூடாது. எனவே இந்தியர்கள் நீண்ட காலமாக க்ரீன் கார்டு காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.

எச்-1பி விசா

எச்-1பி விசா

அமெரிக்காவில் க்ரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் அனைவரும் எச்-1பி விசா திட்டம் மூலம் அதிகத் திறன் படைத்த ஊழியர்களாக அங்கு இருக்கும் நிறுவனங்களில் பணிபுரிய சென்றவர்களே ஆவர்.

காத்திருப்புக் காலம்

காத்திருப்புக் காலம்

தற்போது இருக்கும் நிலையினைப் பார்த்தால் இந்தியர்கள் அமெரிக்காவில் எச்-1பி விசா பெற 70 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதியதாகத் துவங்கப்பட்ட ஜிசிரிஃபார்ம்ஸ் என்ற குழுமம் 25 முதல் 92 ஆண்டுகள் வரை இந்தியர்கள் காத்திருந்து க்ரீன் கார்டு பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians account for over 70% of US green card waiting list

Indians account for over 70% of US green card waiting list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X