எச்1பி விசா கட்டுப்பாடுகளால் இந்திய மாணவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை..!
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம் பதவியேற்றிய பின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் இந்தியர்களை நேரடியாகத் தாக்கும் ஒன்றான எச்1-பி விசா கட்டுப்பாடுகள் அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்குமா என்ற சந்தேகம், அறிவிப்பு வெளியான நாள் முதலே இருந்து வருகிறது.
இந்த அச்சத்திற்கும் குழப்பத்திற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.
கவலை வேண்டாம்..
தற்போது அமெரிக்கா அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து நிறுவனங்கள் வாயிலாக மிகவும் குறைந்த சம்பளத்திற்கு அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே அதிகளவில் பாதிக்கும்.
ஆகியால் அமெரிக்கக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் இதுகுறித்து எவ்விதமான அச்சம் அடையத் தேவையில்லை.
வேலைவாய்ப்பு
மேலும் தற்போது கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின் வேலைவாய்ப்பு அளிப்பதிலும், கிடைப்பதிலும் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. மேலும் இதில் எச்1பி விசா கட்டுப்பாடுகள் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று லாரன்ஸ் டெக்னாலஜிக்ல் பல்கலைக்கழகத்தின் தலைவர் வீரேந்தர் கே மவ்ட்கில் தனது இந்திய பயணத்தில் தெரிவித்தார்.
திறமை
அமெரிக்காவும் சரி, அமெரிக்க நிறுவனங்களும் சரி இந்தியர்களின் திறமையைப் பெரிய அளவில் மதிக்கிறது. இதனால் இந்திய மாணவர்களைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.
இந்திய நிறுவனங்கள்
இதுவரை அமெரிக்க அரசையும் இந்திய ஊழியர்களையும் ஏமாற்றி வந்த இந்திய நிறுவனங்களே இப்புதிய எச்1பி விசா கட்டுப்பாடுகள் மூலம் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே அமெரிக்கக் கல்லூரிகளில் பயின்று வரும் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகள் இப்போது பிரகாசமாக இருக்கிறது.
புதிய அறிவிப்பு
வெளிநாட்டுப் பணியாளர்களையும், மக்களையும் அமெரிக்காவை விட்டு வெளியேற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த டிரம்ப் அரசு, சமீபத்தில் எச்4 விசா பெற்ற வெளிநாட்டவர்களுக்கு முறையாக வழங்கப்பட்ட Work permit-ஐயும் ரத்துச் செய்யத் முடிவு செய்தது.
பிப்ரவரி 2015
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஓபாமா அவர்களின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எச்-1பி விசா வைத்திருக்கும் நபரின் மனைவி அல்லது கணவனுக்கு (எச்-4 விசா வைத்திருப்போர்) அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி (Work permit) அளிக்கப்பட்டது.
இந்தியர்கள்
இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா கொண்டு வேலை பார்க்கும் அனைத்து நபர்களும் தங்களின் கணவன் மற்றும் மனைவிக்கு Work permit பெற முயற்சி செய்து, அமெரிக்காவில் தங்களுக்கான உரிமையைப் பெற்றனர்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த உடனேயே SAVE JOBS USA அமைப்பு இந்த வழக்கை வாஷிங்டன் நீதிமன்றத்தில் தொடுத்தது. தற்போது டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் சட்ட நிர்வாகத் துறை இந்த வழக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மாணவர்கள்
இதன் பிறகு அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான அச்சம் நிலவியது.
தற்போது வீரேந்தர் அறிவிப்புக்குப் பின் இந்திய மாணவர்கள் இடையில் நம்பிக்கை மலர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications