இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமைத்து வர்த்தகம் செய்தாலும், தனது பெரும் பகுதி வர்த்தகம் மற்றும் வருவாய் அமெரிக்கா சந்தையை மையமாகக் கொண்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் அரசு கடந்த சில வருடங்களாகவே வெளிநாட்டவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் செல்லும் திட்டங்கள் மீது கடுமையான கட்டுப்பாடு விதித்து வருகிறது.
இதோடு வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் வந்து பணியாற்றக் கொடுக்கப்படும் விசாவிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹெச்1பி விசா கீழ் வரும் ஊழியர்களின் சம்பளத்தை அமெரிக்கக் குடிமக்களுக்கு இணையான அளவிற்கு உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இதனால் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது பல்வேறு மாற்ற வழிகளைத் தேடி வருகிறது, இதில் இன்போசிஸ் வர்த்தக வளர்ச்சிக்காகவும், வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், கூடுதல் வருவாய் பெற தற்போது மிகப்பெரிய முதலீட்டில் ப்ளூ அகார்ன் ஐசிஐ நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.
125 மில்லியன் டாலர்
டிஜிட்டல் கஸ்டமர் எக்ஸ்பிரியன்ஸ், காமர்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை பிரிவில் அமெரிக்காவில் சிறந்து விளங்கும் ப்ளூ அகார்ன் ஐசிஐ நிறுவனத்தைச் சுமார் 125 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 915 கோடி ரூபாய்க் கொண்டு இந்நிறுவனத்தைக் கைப்பற்ற இரு தரப்பு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளது.
43.6 மில்லியன் டாலர் வருவாய்
Beringer Capital நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ப்ளூ அகார்ன் நிறுவனத்தை இன்போசிஸ் -ன் கிளை நிறுவனமாந இன்போசிஸ் நோவா ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தான் அமெரிக்காவின் Charleston பகுதியில் அமைந்திருக்கும் இந்நிறுவனத்தை வாங்குகிறது.
2019ஆம் ஆண்டில் ப்ளூ அகார்ன் நிறுவனம் 43.6 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ்-க்கு லாபம்
ப்ளூ கார்ன் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் திட்டம், தொழில்நுட்பம் குறித்த விளக்கங்களை மேம்படுத்தப்பட்ட வகையில், இன்போசிஸ் தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும்.
இந்நிறுவனத்தின் கைப்பற்றல் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் கஸ்டமர் எக்ஸ்பிரியன்ஸ், காமர்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை, அனுபவம் தழுவிய வாடிக்கையாளர் சேவை ஆகியவை பல மடங்கு மேம்படும் எனத் தெரிகிறது. இது இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபமாகப் பார்க்கப்படுகிறது.
பிற சேவைகள்
டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் சேவை மட்டும் அல்லாமல் strategy, analytics, design, மற்றும் engineering பிரிவிலும் ப்ளூ அகார்ன் ஐசிஐ சிறந்து விளங்குகிறது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் தற்போது இந்நிறுவனத்திற்கு மீடியா, நுகர்வோர் சரக்கு மற்றும் ரீடைல், நிதியியல் சேவை, உற்பத்தி, தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறையில் வாடிக்கையாளர்களை அதிகளவில் வைத்துள்ளது.
புதிய சக்தி
சமீபத்தில் இன்போசிஸ் கைப்பற்றிய WongDoody நிறுவனம் மார்கெட்டிங் சேவை பிரிவில் சிறந்து விளங்கும் நிலையில், தற்போது ப்ளூ ஆகார்ன் நிறுவனம் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குகிறது. இவ்விரு நிறுவனத்தின் மூலம் Adobe, Magento, Salesforce Commerce மற்றும் Shopify ecosystems ஆகியவற்றில் பலம் அடைவது மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications