நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ், தனது சக போட்டி நிறுவனங்களைப் போல அமெரிக்காவில் தனது வர்த்தகத்தையும், அலுவலகத்தையும் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் கடுமையான சட்டதிட்டங்களால் இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளது.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இன்போசிஸ் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க வர்த்தகத்தை மையமாக வைத்தே இயங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம் பிற எந்த நாடுகளையும் காட்டிலும் அமெரிக்காவில் வர்த்தகம் அதிகமாகக் கிடைப்பதோடு, வருமானமும் அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அமெரிக்காவைக் குறிவைத்தே தனது வர்த்தகத்தை நடத்துகிறது.
இதன் காரணமாக இந்தியர்களுக்கு இந்திய ஐடி நிறுவனங்களின் வாயிலாக அதிகளவிலான ஆன்சைட் வாய்ப்புகளும் கிடைக்கிறது. டிரம்ப் ஆட்சிக்கு முன்பு வரையில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்துள்ள வெளிநாட்டவர்கள் பட்டியலில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய போட்டியே நடக்கும். இந்த அளவிற்கு அமெரிக்காவிற்கும் இந்திய ஐடி நிறுவனங்களும் பின்னிப் பிணைந்திருக்கும்.
ஆனால் டிரம்ப் வந்த பின் கதை மொத்தமும் மாறியுள்ளது, அமெரிக்க நிறுவனங்களின் பிராஜெக்ட்கள் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான் செல்ல வேண்டும், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத் தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அமெரிக்காவில் வேலை செய்ய வருவோருக்குக் கொடுக்கப்படும் H1B விசாவில் தொடர்ந்து கட்டுப்பாடுகள், கிரீன்கார்டு கொடுப்பதில் கட்டுப்பாடு எனத் தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், இந்தியர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது அமெரிக்கா.
இதனைச் சமாளிக்க முடியாமல் இந்திய ஐடி நிறுவனங்களும் பணிந்து போக வேண்டிய சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கத் துவங்கியது. அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து புது அலுவலகங்களைத் திறந்து வருகிறது.
இதன் வரிசையில் தற்போது இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் புதிய Technology மற்றும் Innovation Center-ஐ திறந்துள்ளது. இப்புதிய அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டுக்குள் 1000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இன்போசிஸ் துவங்கியுள்ள புதிய இன்னோவேஷன் திட்டத்திற்கு 2017இல் அறிவித்த படி 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
இப்புதிய அலுவலகத்திலிருந்து இன்போசிஸ் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், புல் ஸ்டேக் இன்ஜினியரிங், டேட்டா சையின்ஸ் மற்றும் செக்யூரிட்டி ஆகிய முக்கியமான தொழில்நுட்பத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications