சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். இதன் மொழி, கலாச்சாரம், உள்ளிட்ட பலவும் ரஷ்யாவினை ஒத்துபோவதால், ரஷ்யாவின் ஒரு பகுதி தான் உக்ரைன் என கருதுகிறது.
ஆனால் உக்ரைனோ தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவ பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு என பலவற்றிலும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகின்றனர்.
சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி வாழவே விரும்புகின்றனர்.
பல சிக்கலில் உக்ரைன்
விவசாயம், ஏற்றுமதியில் முக்கியமான நாடாக இருந்து வருகிறது. எனினும் ராணுவ பலத்தில் ரஷ்யாவினை விட பின் தங்கியுள்ளது. சரியான பொருளாதார வளர்ச்சியும் இல்லை. அதோடு வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருந்து வருகின்றது. இப்படி பல சிக்கல்களும், இன்னல்களுக்கும் மத்தியில் தான் உக்ரைன் இருந்து வருகின்றது.
ஆலைகளை மூடலாம்
இப்படி நெருக்கடியான நிலையினை இன்னும் மோசமாக்கும் விதமாக, ரஷ்யாவிலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உக்ரைனில் பெரும் பதற்றமான நிலை இருந்து வருகின்றது. இந்த நிலையில் புரூவர் கார்ல்ஸ்பெர்க், ஜப்பான் டொபாக்கோ, கோகோ - கோலா பாட்டிலர் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடியுள்ளன.
அதே நேரம் யுபிஎஸ்(UPS) மற்றும் ஃபெட்டெக்ஸ் (FedEx Corp) உள்ளிட்ட நிறுவனங்களும் அதன் சேவையினை நிறுத்தியுள்ளன. இது நாட்டிற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி சேவையை நிறுத்தியுள்ளன.
பீர் உற்பத்தி
உக்ரைனின் பீர் சந்தையில் 31% பங்கைக் கொண்ட டென் மார்க்கின் கார்ல்ஸ்பெர்க், நாட்டில் உள்ள அதன் மூன்று மதுபான ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில் கோகோ - கோலா பாட்டிலர் தற்காலிகமாக தனது ஆலையை மூடுவது என்ற முடிவில் உள்ளன.
ஆலைகள் மூடல்
ஜப்பான் புகையிலை நிறுவனம் மத்திய உக்ரைனில் உள்ள ஒரு சிகரெட் ஆலையை மூடியது. அதேபோல உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான மார்ஸ்க், பிப்ரவரி இறுதிவரையில் உக்ரைனில் துறைமுக அழைப்புகளை நிறுத்தியது. அதேபோல கருங்கடல் பகுதியில் உள்ள ஒடொசாவில் உள்ள அதன் முக்கிய அலுவலகத்தினை மூடியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications