தெஹ்ரான்: உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனையின் நன்மைக்காக இறக்குமதி செய்யும் பலவேறு பொருட்களுக்குத் தடை விதிப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இணையான உள்நாட்டு மாற்றுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மக்களுக்குத் தேவையான அளவிலான கரன்சிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், இறக்குமதியை தவிர்க்கும் போது ஈரான் கரன்சி மதிப்புச் சரிவினை குறைக்க முடியும் என்று நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்படாத பொருட்கள்
ஈரானில் கிடைக்காத, உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்ய எந்தத் தடையினை அரசு விதிக்கவில்லை என்பது மக்களுக்கு ஆறுதலான செய்தி ஆகும்.
முழுப் பட்டியல் எப்போது?
இறக்குமதி செய்ய எந்தப் பொருட்கள் எல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற முழுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காரணங்கள்
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மற்றும் வெளியில் செல்லும் கரன்சி மதிப்பினை குறைப்பது போன்றவையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத் தடை
மறுபக்கம் அமெரிக்க அரசு ஈரான் உடன் 2015-ம் ஆண்டுக் கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது மட்டும் இல்லாமல் பொருளாதாரத் தடையினையும் விதித்து வருகிறது. அதனை எதிர்கொள்ளவே இந்த முடிவினை ஈரான் அரசு எடுத்துள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றால் அமெரிக்கா விதித்துள்ள 12 கோரிக்கைகள் மற்றும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!



Click it and Unblock the Notifications