இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் திங்கட்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஏறத்தாழ 400 ஏவுகணைகளை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ஏவுகணை மூலம் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் ஏவுகணை செலுத்தப்பட்டு, இஸ்ரேல் நோக்கி வருகிறது என்பதை உறுதி செய்யப்பட்ட உடனே இஸ்ரேல் அரசு தாக்குதல் நடக்கப்போகும் இடங்களில் இருக்கும் மக்களுக்கு சைரன் வாயிலாகவும், ஸ்மார்ட்போன் மூலமாகவும் எச்சரிக்கை விடுத்த நிலையில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, தங்கள் உயிரை பாதுகாக்கவைத்த காரணத்தால் அதிகளவிலான உயர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் துவங்கிய உடன் இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு பல ஏவுகணைகளை எதிர் தாக்குதல் நடத்தி வீழ்த்திருந்தாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியதாகவும் குறிப்பிடத்தக்கச் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த மோதல் பெரிய அளவிலான போராக வெடிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் இனி வரும் நாட்களில் இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நட்பு நாடுகளும், ஆதரவு அமைப்புகளும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் நாட்டின் இந்த தாக்குதலுக்கு முக்கியமான காரணம், இஸ்ரேல் ஈரானின் முக்கிய தலைவர்களைக் கொன்றதுதான் என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. இரானின் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கப்படும் என இஸ்ரேல் ராணுவ தலைவர் எச்சரித்திருக்கும் வேளையில் இப்பகுதியில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஈரான், இஸ்ரேல் பல முக்கியமான விஷயங்கள் பற்றி விளக்கம் கொடுத்துள்ளது.
ஈரான், இஸ்ரேலின் முக்கிய புலனாய்வு அமைப்பான மொசாத் தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. ஆனால், இஸ்ரேல் இதை மறுத்துள்ளது. சில ஏவுகணைகள் ஆளில்லாத, கட்டிடங்கள் இடத்தில் விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஃபத்தா என்னும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. ஆனால், இஸ்ரேல் இதை மறுத்துள்ளது. தாக்குதலில் இரண்டு பேர் மட்டுமே காயமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இதேபோல் உயர் சேதம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி அளித்தால், "நசுக்கும் தாக்குதல்களை" (crushing attacks) நடத்தும் என எச்சரித்துள்ளது. ஆனால், இஸ்ரேல், இரானின் தாக்குதலை "இரானின் மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை "ஈரானின் மிகப்பெரிய தவறு" என்று கூறியது மற்றும் இதேபோல் இஸ்ரேல் நேரம் பார்த்து பதிலடி கொடுக்கும் என்றும் IDF செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறினார்.
More From GoodReturns

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications