அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது ஈரான் என்னை கொலை செய்ய முயற்சி செய்யலாம் என டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வந்தார். அவரது கூற்றை நிரூபிக்கும் வகையில் ஈரான் துருக்கியில் வைத்து டிரம்பை கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவர் இருந்த தரைத்தளம் உள்ளிட்ட மிக ரகசியமான தகவல்களை ஈரான் உளவுத்துறையினர் துல்லியமாக அறிந்திருந்ததாக அமெரிக்க ஊடகமான நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியான தகவல்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு தெரிந்ததை தொடர்ந்து, அதிபர் டிரம்பின் பாதுகாப்பிற்காக ரகசிய திட்டம் தீட்டி மாற்று விமானத்தில் அவரை பத்திரமாக அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர். கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று, நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி நாளில், அதிபர் டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
குறிப்பாக அதிபர் டிரம்ப் பயணம் செய்யும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை குறிவைத்து, வான்வழி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்தது. அதுமட்டுமில்லாமல் உச்சிமாநாடு நடைபெற்ற இடத்திற்கு அருகில், தோளில் சுமந்து சென்று ஏவக்கூடிய ஏவுகணையுடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிவதையும் அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது.
ஈரானின் உளவுப்படையினர் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டல், எந்த அறையில், எந்த தளத்தில் அவர் இருக்கிறார் என்பது வரை மிக துல்லியமாக தெரிந்து வைத்திருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் உணர்ந்தனர் என அதிகாரிகள் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி சுட்டிக்காட்டுகிறது.
இந்த அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமானவை என்பதால், டிரம்பை அங்காராவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க அதிகாரிகள் ஒரு ரகசியத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக, டிரம்ப் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போன்ற காட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அவர் ரகசியமாக விமானத்தின் பின்புறம் உள்ள கேட்டரிங் கண்டெய்னர் வழியாக வெளியேற்றப்பட்டாராம்.
அங்கிருந்து அவர் ஒரு ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு அங்காராவிலிருந்து பாதுகாப்பாக புறப்பட்டுள்ளார். டிரம்ப் ஏறியதாக காட்டப்பட்ட அந்த பழைய விமானம், அதிபர் இல்லாமலேயே புறப்பட்டது. அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இருந்தனர். அவர்களுக்கு கூட டிரம்ப் விமானத்தில் இல்லை என்பது தெரிவிக்கப்படவில்லையாம்.
பின்னர் விமானம் பிரிட்டனை அடைந்ததும், அங்கிருந்து டிரம்ப் ரகசியமாக தனது உண்மையான விமானத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரை படுகொலை செய்ய ஈரான் முயற்சி செய்ததா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்பதால் துருக்கியில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக் என விசாரணை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications

